அயலான் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்திற்காக தான் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.
Advertisment
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்துள்ள படம் அயலான். யோகி பாபு, இஷா கோபிகர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், ஆர்.டி. ராஜா படத்தை தயாரித்துள்ளார். சில வருடங்களாக தயாரிப்பில் இருந்த இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.
இதனிடையே அயலான் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், படம் பற்றி தகவல்களை பகிர்ந்துகொண்ட நிலையில், 'அயலான்' படத்திற்காக தான் எந்த சம்பளமும் வாங்கவில்லை என்று கூறியுள்ளார்
திட்டமிடப்பட்டதை விட படத்தின் பட்ஜெட் தாண்டிவிட்டதால், தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக 'அயலான்' படத்திற்கு சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்கவில்லை. 'அயலான்' படப்பிடிப்பை 95 நாட்களில் முடித்துவிட்டாலும் கடந்த சில ஆண்டுகளாக படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்துள்ளது.
Advertisment
Advertisements
இதில் ஒருமுறை இயக்குனர் ரவிக்குமாரிடம் ஒரே நேரத்தில் மற்றொரு படத்தையும் பண்ணலாம் என்று சொன்னாலும், அப்படி செய்தால் 'அயலான்' படத்தில் கவனம் செலுத்தாமல் போகலாம் என்பதால் இயக்குனர் அந்த திட்டத்திற்கு மறுத்துவிட்டார். மேலும்'அயலான்' இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்காக கூடுதலாக மூன்று பாடல்களை கொடுத்துள்ளார்.முன்பு வெளியான பாடல்கள் படத்தின் நீட்டிப்பு காரணமாக பழையதாகிவிட்டது.
இதன் காரணமாக புதிதாக 3 பாடல்கள் வழங்கி இருந்தாலும் ஏ,ஆர்.ரஹ்மான் கூடுதல் சம்பளம் வாங்கவில்லை, அதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குழுவும் படத்திற்கு பெரும் ஆதரவை வழங்கியுள்ளததாக கூறிய சிவகார்த்திகேயன், எம்.ஜி.ஆர் குறித்து தகவலை பகிர்ந்துகொண்டார். மூத்த நடிகர் எம்.ஜி.ஆருக்கு ஒருமுறை வேற்றுகிரகவாசியைப் பற்றிய படம் செய்ய ஆசை இருந்தது, ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை.
எனவே, தற்போது வேற்றுகிரகவாசியை வைத்து ஒரு படத்தை எடுத்திருப்பதால் தான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மீண்டும் இயக்குனர் ரவிகுமாருடன் மீண்டும் இணைவதை உறுதி செய்த சிவகார்த்திகேயன் அதை பற்றியும் தெரிவித்துள்ளார். 'அயலான்' டீசர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்பட்டுள்ளது, படம் 2024 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.