தமிழ் சினிமாவில் பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் நான்கு தசாப்தங்களாக தன்வசப்படுத்தி அசைக்கமுடியாத சூப்பர்ஸ்டாராக இன்றளவும் இருப்பவர் ரஜினிகாந்த். கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக இவருடைய திரைப்படங்கள் ரசிகர்களாலும் வெகுஜன மக்களின் அபிமானத்தையும் பெற்றிருந்ததை இவரின் தொடர் வெற்றிகள் மூலமாக அறியலாம்.
இவருடைய திரைப்படங்கள் கடந்த 1991ம் ஆண்டு நவம்பரில் வெளியான தளபதி படத்திலிருந்து 31 வருடங்களாக நள்ளிரவு காட்சிகளும், அதிகாலை காட்சிகளும் திருவிழாவாக திரையரங்கை அலங்கரித்துள்ளது. இந்த நிலை முடிவில்லா வரலாறாக இன்றளவும் தொடர்கிறது. அந்தந்த காலகட்டங்களில் இவருடைய சமகால போட்டியாளர்களாக இருந்த நடிகர்களின் படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தாலும் ரஜினி படங்களின் திரையரங்க எண்ணிக்கையையோ காட்சிகளின் எண்ணிக்கையையோ சமன் செய்ததில்லை என்பது மாற்றங்களுக்குட்படாத அறிவியல் விதிகளை போன்றது.
கடந்த இருபது வருடங்களாக அடுத்த தலைமுறை இளம் நடிகர்களாக அறியப்பட்ட நடிகர்களும் தங்களது இருபதாண்டு திரைப்பயணத்தை கடந்த பிறகே அதிகாலை காட்சிக்கு ரசிகர்களை வரவைக்க முடிந்தது. அதையும் சமூகவலைதளங்கள் மூலமாகவே சேர்க்க முடிந்ததை ஆய்வுகள் மூலம் அறியலாம். தற்போது மேற்சொன்ன நடிகர்ளும் சீனியர் நடிகர்களாகிவிட்ட நிலையில் மூன்றாம் தலைமுறை நடிகர்களின் ஆதிக்கம் இளைஞர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டதை சிவகார்த்திகேயன் ,தனுஷ் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் ஆரவாரம் உறுதிசெய்கிறது.
அதே சமயம் ரஜினி நாற்பது வருடங்களை கடந்து இன்னமும் வெகுஜன மக்களின் ஆதர்ஷ நாயகனாக தொடர்வதற்க்கு ரசிகர்கள் பலமும் அதற்கு இணையாக பெண்கள் ,குழந்தைகள் ஆதரவையும் பெற்றிருப்பதே காரணம். இப்படி ரஜினிக்குப்பிறகு மிகக்குறுகிய காலகட்டத்தில் ஆறிலிருந்து அறுபது வயதுவரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் சிவகார்த்திகேயன் பெற்றிருப்பது உண்மையிலேயே ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டிய ஒன்றே!
இவரது படங்கள் ரஜினியின் மிக சாதாரண கமர்ஷியல் படங்கள் 80 களில் எப்படி பெரும் வெற்றிகளை தொடர்ந்து பெற்றதோ அதேபோல வெற்றியடைவதை சீனியர் விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் உறுதிசெய்கின்றனர். ரஜினி படங்களை அதிகமாக விநியோகம் செய்த வட மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த விநியோகஸ்தர் டிடிசி சங்கர் சிவகார்த்திகேன் நிச்சயமாக அடுத்த ரஜினியாக உருவெடுத்துவிட்டார் என்றே அடித்து சொல்வதை பலரும் வழிமொழிகின்றனர்.
இப்படி மிகக்குறுகிய காலகட்டத்தில் அதிகாலை காட்சிக்கு தன்னெழுச்சியாகவே ரஜினிக்குப்பிறகு சிவகார்த்திகேயன் ரசிகர்களை ஈர்ப்பது சிவகார்த்திகேயன் தான் ஒரு ஒன்மேன் ஆர்மி என்பதை நிரூபிக்கின்றார். இதற்கிடையில் டாக்டர், டான் படங்களை தொடர்ந்து சாதாரண வேலை நாட்களிலேயே முன்பதிவில் பிரின்ஸ் படம் சாதனை செய்வதையும் உறுதிப்படுத்துகிறது. பிரின்ஸ்பட முன்பதிவு சத்தமில்லாமல் சாதனை நாயகனாக நகர்கின்றார் கோலிவுட் பிரின்ஸ் எஸ்கே என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சிவகார்த்திகேயன்.
திராவிட ஜீவா
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.