கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவக்குமார், கல்லூரி இறுதி ஆண்டு படித்த சூர்யா பி.காம் டிகிரி முடிக்காமல், 4 அரியர்ஸ் வைத்திருந்தார் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் சூர்ய நடிப்பில், அதிக பொருட்செலவில் தயாராகியுள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில், பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல் ஆகியோருடன், நட்டி நட்ராஜ், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஸ்டூயோகிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
அக்டோபர் 10-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்த படம் தற்போது நவம்பர் 12-ந் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே சென்னையில் நடைபெற்ற கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில், பங்கேற்ற நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார் பேசுகையில், 1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதி அதிகாலையில் பிறந்தவர் சூர்யா. என்று தொடங்கி அவர் எங்கு பள்ளி படிப்பை முடித்தார் என்று கூறினார்.
அதன்பிறகு பேசிய அவர், நான் சூர்யாவை கல்லூரியில் சேர்க்க லயோலா கல்லூரியில் விண்ணபித்தோம். ஆனால், அவர்கள் சீட் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நானே நேரில் சென்று கேட்டபோது, சிவாஜி பையன் பி.காம் டிகிரி முடிக்கவில்லை. நடிகர் தயாரிப்பாளர் கே.பாலாஜி மகன் பி.காம் டிகிரி முடிக்கவில்லை. கொட்டாரக்காரா மகன் பி.காம் டிகிரி முடிக்கவில்லை.
அதேபோல் உங்கள் மகனும் முடிக்கமாட்டான் என்று சொல்ல, என் மகன் கண்டிப்பாக டிகிரி வாங்குவான் என்று சொல்லி அவனுக்கு சீட் வாங்கினேன்
அதன்பிறகு இறுதி ஆண்டில் 4 அரியருடன் என்னிடம் வந்தார். சவால் விட்டிருக்கிறேன். எப்படியாவது பாஸ் ஆகிவிடு என்று சொன்னேன். அதன்பிறகு இரவு பகலாக படித்து சூர்யா அந்த அரியரை க்ரியர் செய்தான் என்று நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “