சிவகுமார் மடியில் 2 ஹீரோ: ஒண்ணு சூர்யா; இன்னொருவர் கார்த்தி இல்லை!

Tamil Cinema Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இருவரும் நடிகர் சிவக்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Sivakumar Viral Photo : தமிழ் சினிமாவில் இரண்டு முன்னணி நடிகர்கள் நடிகர் சிவக்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது வசூல் நாயகர்களாக வலம் வரும் முக்கிய நடிகர்களில் விஜய் மற்றும் சூரியாவிற்கு தனி இடம் உண்டு. கடந்த 1997-ம் ஆண்டு இயக்குநர் வசந்த இயக்கத்தில் வெளியாக நேருக்கு நேர் படத்தில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகர் சூர்யா, அந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டு வெளியான பிரணட்ஸ் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அடுத்து இவர்கள் இருவரும் 3-வது முறையாக இணைவிருந்த படம் கைவிடப்பட்ட நிலையில், சூர்யா நடிப்பதாக இருந்த படத்தில் விஜய் நடித்து வெளியானதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய் கௌசல்யா நடிப்பில் வெளியான படம் பிரியமுடன். இந்த படத்தில் வில்லத்தனம் கலந்த கதாப்பாத்திரத்தில் நடித்திரந்த விஜய் கடைசியில் இறந்து விடுவார். ஆனால் தற்போது இந்த படத்தில், சூர்யா நாயகனாக நடிக்க இருந்ததாக இயக்குநர் வின்செண்ட் செல்வா கூறியுள்ளார். சமீபத்தில் இது தொடர்பாக பேசிய அவர், பிரியமுடன் படத்தில் விஜய் நடித்த கதாப்பாத்திரத்தில் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தது. ஆனால், தயாரிப்பு தரப்பில் சூர்யாவை நடிக்க வைக்க கொஞ்சம் யோசித்தார்கள்.

அதனால் சூர்யா சார்கிட்ட இந்த படத்தின் கதையைச் சொல்லவில்லை. ஆனாலும் இந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது. அப்போதைய காலக்கட்டத்தில், எல்லாரும் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க யோசித்தார்கள். ஆனால், விஜய் சார் துணிச்சலாக நடிக்க நடித்தார். இதில் முதலில் விஜய் சாரிடம் துணிச்சலாக கதை சொல்லி முடித்துவிட்டு சூர்யா சார் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க யோசித்து வைத்து இருக்கிறேன். நீங்கள் பாசிட்டிவ் கேரக்டர் பண்றீங்களா என்று கேட்டேன். ஆனால், இந்தப் படம் பண்ணா நான் நெகட்டிவ் கேரக்டர் தான் பண்ணுவேன் என்று விஜய் சார் உறுதியா இருந்தார் என கூறியுள்ளார்.

பிரியமுடன் படம் வெளியாகி 22 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில்கடந்த ஆண்டு இந்த படத்தை சிங்கள மொழியில் ரீமேக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திரையை தாண்டி பொது வாழ்க்கையிலும் சிறு வயது முதலே நண்பர்களாக இருக்கும் விஜய் மற்றும் சூர்யா சிறுவயதில் நடிகர் சிவக்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil actor sivakumar viral photo with tamil movie leading actors

Next Story
புடவை, லெஹெங்கா, கவுன்… நட்சத்திரமாய் ஜொலிக்கும் நக்ஷத்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!VJ Actress Nakshathra Nagesh Latest Photoshoot Photos
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com