Advertisment

நகைச்சுவை நடிகரால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும்... விடுதலை குறித்து சூரி நம்பிக்கை

நகைச்சுவை நடிகர் சூரி தனது வாழ்க்கையில் மிகப்பெரிய வாய்ப்புகளில் ஒன்றான வெற்றிமாறனின் விடுதலை படம் குறித்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Actor Soori

நடிகர் சூரி விடுதலை

காதலுக்கு மரியாதை படம் தொடங்கி பீமா வரை பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து, 2009-ம் ஆண்டு வெளியான வென்னிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சூரி. காமெடியன் மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்துள்ள சூரி வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளர்ர்.

Advertisment

அடிதடி சண்டை காட்சிகள் நிறைந்த கமர்ஷியல் ஹீரோவாக இல்லாமல் ஒரு கதையின் நாயகனாக சூரி நடித்துள்ளது இந்த படத்தின் தனிச்சிறப்பு. மறைந்த பழம்பெரும் இயக்குனர் பாலு மகேந்திராவின் மாணவரான வெற்றிமாறன் தான் இயக்கியுள்ள விடுதலை படத்தில் சூரியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அவரை புதுவித சூரியாக மாற்றியுள்ளார்.

கோடம்பாக்கத்தின் அசாத்தியமான சினிமா துறையில், மதுரையைச் சேர்ந்த பலர் அன்றாட மக்களின் வெற்றிக் கதைகளில் நடித்து பெயர் பெற்ற பட்டியலில் தற்போது சூரியும் இணைந்துள்ளார். 1997 முதல் சினிமா துறையில் இருந்தபோதிலும், வெண்ணிலா கபடி குழு (2009) திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தார். இந்த படத்தில் அவர் ஒரு பந்தயத்தில் வெற்றி பெற 50 பரோட்டாக்களைக் சாப்பிடுவார். இந்த காட்சி இப்போதும் பலராலும் ரசிக்கப்படுகிறது. இதன் மூலம் 'பரோட்டா சூரி' என்ற பெயரைப் பெற்றார்.

25 வருடங்கள் நீண்ட பயணமாக, எந்த விதமான பாத்திரத்தையும் சரியாகச் செய்ய முடியும் என்று நினைக்கும் இடத்திற்கு வந்துள்ள சூரி "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்று கூறியுள்ளார். ஆனால் அவர் ஒரு கணம் யோசித்த பிறகு இப்போது எப்படி உணர்கிறார் என்பதைப் பற்றி கூறியுள்ளார். விடுதலை படம் சுமார் இரண்டு வருடங்களாகத் தயாரிப்பில் இருந்ததால் தனக்கு ஒரு நிம்மதி இருக்கிறது. அதே சமயம் தனது இந்த பயணத்தை தொடரலாமா அல்லது நிறுத்தலாமா என்று யோசித்துக்கொண்டிருப்பதாக இந்த பயணத்தை விமானத்துடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்.

மேலும் வெற்றிமாறன் சாரின் உதவியாளர் மணிமாறனிடம் அவரது படங்களில் சில காட்சிகளை மட்டும் நடிக்க வாய்ப்பு தருமாறு நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன், அது நகைச்சுவை காட்சியாக இருக்க வேண்டும் என்பதில்லை கூறியிருந்தேன். ஒருமுறை வெற்றி சார் படத்தின் எனக்கு ஒரு ரோல் இருப்பதாகவும், அவரே என்னை அழைப்பார் என்றும் மணிமாறன் கூறினார். அழைப்பை எதிர்பார்த்து அன்று இரவு நான் தூங்கவில்லை, ஆனாலும் அந்த அழைப்பும் வரவில்லை. நான் மணியை வம்பு செய்துகொண்டே இருந்தேன், கடைசியாக வெற்றி சாரின் போன் நம்பரை அனுப்பி, நீயே பேசிக்கொள் என்று சொன்னார்.

நான் மீண்டும் அவரை அழைக்கலாமா வேண்டாமா என்று நினைத்து ஒரு இரவு முழுவதும் தூங்காமல் இருந்தேன். பின்னர் இறுதியாக நான் அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன், அவர் என்னை அவரது அலுவலகத்திற்கு வரும்படி மீண்டும் அழைத்தார். நான் அங்கு சென்றபோது அவர் ஒரு கதையின் அவுட்லைனைச் சொன்னார், நான் எந்த பாத்திரத்தை எடுப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இருப்பினும், அவர் அனைத்து துணை கதாபாத்திரங்களுக்கும் ஒரு நடிகரை வைத்திருந்தார், எனக்கு என்ன காத்திருக்கிறது என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.

கடைசியில், நாயகன் வேடத்தை நீயே செய்' என்று சொல்லிவிட்டார். அதற்கு  நான் பதில் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தேன், மெதுவாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்து, காரில் அமர்ந்து, என் டிரைவரிடம் காரை ஸ்டார்ட் செய்யச் சொல்லி, மகிழ்ச்சியுடன் புறப்பட்டேன். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை, ஏனெனில் அந்த படம் இறுதியில் கைவிடப்பட்டது. அப்போது எனது விமானம் தரையிறங்கியது.

மேலும் வெற்றிமாறன் தனுஷின் அசுரன் படத்தில் பிஸியாகிவிட்டார். இருப்பினும், என்னுடன் ஒரு கூட்டு முயற்சியில் இருப்பதாக வெற்றி கூறியிருந்தார். “பொதுவாக, வெற்றி சாரின் படம் ஹிட்டாகும், அசுரன் பிளாக்பஸ்டராக மாறியது. அதனால் அவர் விஜய்யுடன் இணைகிறார் என்ற வதந்திகள் தொடங்கியது, மேலும் அவர் சூர்யாவுடன் இணைகிறார் என்ற செய்திகள் வந்தன. சரி என நினைத்தேன். ஆனால் அவர் மீண்டும் என்னை அழைத்து துபாயை பின்னணியாக வைத்து இன்னொரு படத்தை தொடங்குவோம் என்றார். அப்போது எனது விமானம் மீண்டும் உயரத்தை அடைந்தது.

படத்தின் முதற்கட்ட போட்டோஷூட் நடந்தது. வெற்றியும் நானும் ஒரு கேரவனைப் பகிர்ந்துகொண்டோம். வாகனத்தின் ஒரு முனையில் நான் தயாராகிக் கொண்டிருந்தபோது,  இயக்குனருக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் இயக்குனர் "எங்கே', 'எத்தனை' என்று பேசிக்கொண்டிருப்பதை என்னால் கேட்க முடிந்தது. அது எதைப் பற்றியதாக இருக்கும் என்று நான் கொஞ்சம் கவலைப்பட்டேன். ஆனாலும் ஏதோ கோளாறு என்று எனக்கு தெரிந்தது அப்போதூன் இந்த தொலைபேசி அழைப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் பற்றியது என்பது எனக்கு தெரியவந்தது என்று சூரி கூறுகிறார்..

இந்த காலகட்டத்தில் சூரி தனது மற்ற படங்களின் வாய்ப்பையும் மறுத்துக்கொண்டிருந்தார். ஆனால் வெற்றிமாறன் அவரைக் கேட்காமல் எந்தப் படத்திலிருந்தும் விலக வேண்டாம் என்று கூறியிருந்தார். அதன்பிறகு “ரஜினி சாரின் அண்ணாத்த படம் குறித்து கேட்டபோது தொழில்துறையில் உள்ள எவருக்கும் இது கனவு நனவாகும் தருணம் என்று கூறி படத்தில் நடிக்கச் சொன்னவர். சிவகார்த்திகேயனின் டான் படத்தைத் தவறவிடாதீர்கள் என்று சொன்னார்.  ஏனென்றால் எங்களுடையது ஒரு வெற்றிகரமான கூட்டணி, அது நின்றுவிடக் கூடாது. இருப்பினும், நான் மற்ற படங்களைத் தவிர்த்து வந்தேன், விடுதலை படத்தை ஒத்திவைப்பார் என்பதால் வெற்றி சாரிடம் சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.

பின்னர் விடுதலை எப்படி உருவானது என்பதை பற்றி சூரி கூறுகையில்,  கொரோனா மற்றும் லாக்டவுனுக்குப் பிறகு, வெற்றி சார் மீண்டும் என்னை அழைத்து, துபாய் படத்தை இப்போது செய்ய முடியாது என்பதால் அதை கைவிடுவதாகக் கூறினார். நான் சங்கடப்பட்டேன். ஆனால் சரி என்பது போல் தலையை ஆட்டினேன். ஆனால் கடைசியில், ‘என்னிடம் வேறு கதை இருக்கிறது’ என்று அவர் கூறியபோது எனது விமானம் மீண்டும் புறப்பட்டது. அப்போதுதான் அவர் விடுதலையின் கதையைச் சொன்னார், இப்போது நான் இருக்கிறேன். சுமார் இரண்டு மூன்று வருட காத்திருப்புக்குப் பிறகு.” இந்த நேரத்தில் விமானம் உண்மையில் புறப்பட்டது!

ஒரு நகைச்சுவை நடிகருக்கு வெற்றிகரமான நடிப்பை மாற்றியமைப்பது கடினமாக இருந்தது. “முதல் நாள் பயிற்சி கான்ஸ்டபிளாக கயிற்றில் ஏறி சீனியரிடம் அடி வாங்க வேண்டிய காட்சி இருந்தது. இதையெல்லாம் நான் என் படங்களில் செய்த விதத்தில் நான் ரியாக்ட் செய்தேன். எனக்கு தெரியும் அவ்வளவுதான். ஷாட் முடிந்ததும் என்னிடம் நேரில் பேசிய வெற்றி எனக்கு ‘அந்த’ சூரி வேண்டாம் என்று கூறினார். அவரிடம் கேட்டதைச் செய்யச் சொன்னார். அடுத்த நாளிலிருந்து, அந்த சூரியை அடக்க நான் போராடினாலும், வெற்றியை நான் ஒருபோதும் ஏமாற்றவில்லை. நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு நகைச்சுவை நடிகர் எந்த வேடத்தையும் செய்ய முடியும், ஏனென்றால் மக்களை சிரிக்க வைப்பது கடினம். ஒருவரால் அதைச் செய்ய முடிந்தால், அவர் எந்த வேடத்திலும் நடிக்க முடியும்.

வெற்றிமாறன் சூரியை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தது ஏன் என்று என் மனைவியும் இதையே கேட்டு வியந்தார். அவருக்கு உன்னைத் தெரியாது, அப்புறம் எதுக்கு நீ?’ என்று என்னிடம் கேட்டாள், அவருடைய இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் வரிசையில் நிற்பார்கள். ஆனால் என்னை தேர்வு செய்ததற்கு என்ன காரணம் என்று மணிமாறனிடம் ஒருமுறை கேட்டேன். ‘வெற்றி அந்த கேரக்டருக்கு தேவையான அப்பாவித்தனத்தை உன்னிடம் பார்த்தார்.’ ஒருமுறை வெற்றி சார் என்னிடம் அதையே சொல்லி, அந்த அப்பாவித்தனத்தை ஒருபோதும் விட்டுவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

சூரியைப் பற்றி மேலும் ஈர்க்கக்கூடிய விஷயம் என்னவென்றால், அவர் சுயமாக அறிந்தவர், அதனால்தான் அவர் இனி ஹீரோவாக நடிக்கும் படங்களை மட்டும் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. "ஆனால் அது இப்போது நடந்துள்ளது. இது மிகவும் நல்லது. ஆனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்குத் தெரியாது. எந்த வேடத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். எனக்குள் எப்போதும் ‘அந்த’ சூரி இருக்கிறான். என் வழியில் வரும் எந்தப் பேருந்திலும் ஏறுவேன். நான் சென்றவுடன் சேருமிடத்தைப் பற்றிக் கேட்பேன்."

சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அந்த ‘வீட்டில்’ தனக்கு என்றும் ஒரு இடம் உண்டு என்றும் அவர் மேலும் கூறுகிறார். “எனக்குப் பதிலாக ஒரு புதிய நடிகரை இப்போது தேட வேண்டும் என்று எஸ்கே குறிப்பிட்டார். அவருடைய படங்களில் எனது இடம் நிரந்தரமாக இருப்பதால் அது ஒருபோதும் நடக்காது, நான் எப்போதும் அந்த வீட்டிற்குத் திரும்புவேன் என்று அவரிடம் சொன்னேன் என கூறியுள்ளார்.

சூரி அடுத்ததாக கூழாங்கல் புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய கொட்டுக்காளி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அமீர் இயக்கும் ஒரு படத்திலும், இயக்குனர் ராமுடன் இன்னொரு படத்திலும் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். அதனால் அவரது விமானம் இன்னும் சிறிது நேரம் ஆகாயத்தில் இருக்கும் போல் தெரிகிறது. ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட விடுதலை திரைப்படம் மார்ச் 31ஆம் தேதி வெளியாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Soori
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment