படப்பிடிப்பில் விபத்து: சூர்யாவுக்கு தலையில் காயம்: சூர்யா 44 படப்பிடிப்பு நிறுத்தம்!

சூர்யா 44 படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் சூர்யா காயமடைந்துள்ளார்.

சூர்யா 44 படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் சூர்யா காயமடைந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Surya 44 Injury

ஊட்டியில் நடைபெற்று வரும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்ட நிலையில், நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்த படம், கலவையாக விமர்சனங்களை பெற்றிருந்தது. அதன்பிறகு சூர்யா நடிப்பில் எந்த படமும் வெளியாகாத நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற பெரிய பட்ஜெட் படத்தில் சூர்யா நடித்து வந்தார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருந்த சூர்ய அந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் சில நாட்கள் நடித்துவிட்டு அந்த படத்தில் இருந்தும் விலகினார். சமீபத்தில் கங்குவா படப்பிடிப்பை முடித்த சூர்யா தற்போது தனது 44-வது படமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக சூர்யா 44 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக மாலத்தீவு பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இடையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே மாலத்தீவில் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் கடந்த ஜூலை 26-ந் தேதி முதல் ஊட்டியில் 2-ம் கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

Advertisment
Advertisements

இங்கு சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சூர்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவிட்டு, சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Actor Suriya Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: