சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகியுள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தில் இருந்து தலைவனே என்று தொடங்கும் ஒரு பாடல் வரிகள் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுளளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் சூர்யா நடிப்பில், அதிக பொருட்செலவில் தயாராகியுள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில், பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல் ஆகியோருடன், நட்டி நட்ராஜ், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்தை ஸ்டூயோகிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் அக்டோபர் 10-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நலையில், தற்போது நவம்பர் 12-ந் தேதி வெளியாக உள்ளது. இதனிடையெ கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சூர்யா நடிப்பில் படம் வெளிளாக உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதன் காரணமாக கங்குவா படம் குறித்து சமூகவலைதளங்களில் பிரமோஷனை அதிகரித்து வரும் நிலையில், இந்த படம் குறித்தும் நடிகர் சூர்யா குறித்து அவ்வப்போது புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. கங்குவா இசை வெளியீட்டு விழாவில், நடிகர் போஸ் வெங்கட் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறியிருந்தார். அதேபோல், சூர்யாவின் அப்பா சிவக்குமார், தனது மகன் சூர்யா கல்லூரியின் கடைசி ஆண்டில், அரியர்ஸ் வைத்திருந்தது குறித்து பேசியிருந்தார்.
மேலும் சமீபத்தில் மும்பையில் குடியேறிய சூர்யா, அதற்கான காரணம் குறித்தும் தெரிவித்திருந்தார். இந்த தகவல்கள் அனைத்தும் கங்குவா படத்திற்கு பிரமோஷனாக அமைந்து வரும் நிலையில், தற்போது கங்குவா படத்தில் இருந்து தலைவனே என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் வரிகள் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “