அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மெளனம் ஆபத்தானது – சூர்யாவின் ஜெய்பீம் டிரெய்லர்

Tamil Cinema News : இந்த படத்தில் சூர்யா கவுரவ தோற்றத்தில்தான் நடித்துள்ளார் என்று கூறினாலும் டிரெய்லர் முழுவதும் சூர்யாவின் ஆதிக்கம் தெரிகிறது

Actor Surya Jai Bhim Trailer Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, கடைக்குட்டி சிங்கம், சூரரைப்போற்று, ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் சமீபத்தில் இவரது தயாரிப்பில் சசிகுமார் ஜோதிகா சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் வெளியான உடன்பிறப்பே படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூர்யா தனது தயாரிப்பில் நடித்துள்ள படம் ஜெய்பீம். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான கூட்டத்தில் ஒருவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான டி.ஜே.ஞானவேல் இந்த படத்தை இயக்கியுளளார்.

பழங்குடியின மக்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யா பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக வாதாடும் வக்கீலாக நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,தற்போது இந்த படத்தில் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்களின் வாழ்கை, அவர்கள் சந்திக்கும் பிரச்சனை, சட்டத்தின் அனுகுமுறை உள்ளிட்ட பல காட்சிகள் இந்த டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. சூர்யா இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில்தான் நடித்துள்ளார் என்று கூறினாலும் டிரெய்லர் முழுவதும் சூர்யாவின் ஆதிக்கம் தெரிகிறது. டிரெய்லரின் கடைசியில் நீதிக்கு ஆதரவான வார்த்தைகளைவிட, அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மெளனம் ஆபத்தானது என்று சூர்யா சொல்லும் வசனம் தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சூர்யா ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகினறனர். இதில் அநீதியின் மரணம் நீதிக்கு வாழ்வளிக்கும், உண்மையை உரக்க சொல்லுங்கள் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஒரு ரசிகர் அநீதி நீதி ஆகலாம் புதிய இந்தியாவில் என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil actor surya movie jaibhim trailer released update

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com