Advertisment

அவர் தட்டில் இருந்து எனக்கு ஊட்டிவிட்டார்... விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர்

பெரியண்ணா படத்தின் படப்பிடிப்பில், அவர் தட்டில் இருந்து கறி எடுத்து எனக்கு ஊட்டிவிடவர் விஜயகாந்த். அந்த படத்தின் படப்பிடிப்பில் அத்தனை நாட்களும் அவரை பிரமிப்பாகத்தான் பார்த்தேன் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்

author-image
WebDesk
New Update
surya Vijayakanth

சூர்யா - விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில், வெளிநாட்டில் இருந்து திரும்பிய நடிகர் சூர்யா அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனி இடம் பிடித்திருந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ந் தேதி மரணமடைந்தார். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் அவரது மறைவுக்கு நெரில் அஞ்சலி செலுத்திய நிலையில், தனுஷ், சூர்யா, கார்த்தி, விஷால், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வெளிநாட்டில் இருப்பதால் சமூகவலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடல், டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்றுமுதல் பல பிரபலங்கள், விஜயகாந்த் ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே வெளிநாட்டில் இருந்து திரும்பியுள்ள நடிகர்கள் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடிகர் கார்த்தி தனது அப்பா சிவக்குமாருடன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நிலையில், தற்போது நடிகர் சூர்யா இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா, அண்ணனின் மறைவு மிகவும், துயரமானது. பெரியண்ணா படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இறுதியாக அவரின் முகத்தை பார்க்காதது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரின் நினைவு எப்போதும் எனக்குள் இருக்கும். நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்டுவது எனக்கு சம்மதம் தான். நடிகர் சங்கத்தை மீட்டெடுப்பதில் அவருக்கு பெரிய பங்குண்டு என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பெரியண்ணா படத்தில் நடிக்கும்போது அசைவம் சாப்பிட கூடாது என்று நான் வேண்டுதல் வைத்திருந்தேன். அப்போது முதல் நான் படப்பிடிப்பில் அவரடன் அமர்ந்து சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தபோது, அவர் நீ என்ன என்று உரிமையாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, நீ நடிகன், சக்தியோட இருக்கனும். அதனால் வேறு எதாவது வேண்டுதல் வைத்துக்கொள் என்று சொல்லி அவர் தட்டில் இருந்து கறி எடுத்து உனக்கு ஊட்டிவிட்டார் என்று சூர்யா கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் வீட்டுக்கு நேரில் சென்ற நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் அவரின் இரு மகன்களிடமும், ஆறுதல் கூறியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth actor surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment