scorecardresearch

வீடியோ: அடையாளம் தெரியாதபடி நின்ற மாதவன்… அசந்து போன சூர்யா!

“எனது சகோதரர் நடிகர்சூரியாவால் மட்டுமே என்னை மிகவும் நன்றாக உணரவும், இப்படி நடந்து கொள்ளவும் முடியும்.

வீடியோ: அடையாளம் தெரியாதபடி நின்ற மாதவன்… அசந்து போன சூர்யா!

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ராக்கெட்ரி தி நம்பி வளைவு என்ற படத்தில் நடிகர் சூர்ய கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழக்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் ராக்கெட்ரி தி நம்பி வளைவு. நடிகா மாதவன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் நம்பி நாராயணன் கேரக்டரில் அவரே நடித்துள்ளார். அவரது மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வரும் ஜூலை 1-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ஹிந்தி பதிப்பில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் அதே கேரக்டரில் தமிழில் சூர்யா நடித்துள்ளார். இது தொடர்பாக மாதவன் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில். தனது காட்சியின் படப்பிடிப்புககாக வரும் சூர்யா நம்பி நாராயணன் கெட்டப்பில் உள்ள மாதவனை பார்த்து திகைத்து நிற்கிறார் மேலும் ஒரிஜினல் நம்பி நாராயணன் அருகில் மாதவன் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியாகிறார்.

மேலும் இந்த வீடியோ பதிவில், “எனது சகோதரர் நடிகர்சூரியாவால் மட்டுமே என்னை மிகவும் நன்றாக உணரவும், இப்படி நடந்து கொள்ளவும் முடியும். நம்பி சார் என் சகோதரர் மற்றும் அவரது தந்தையின் மிகப்பெரிய ரசிகர் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் மாதவன் சூர்யாவிடம் கைகுலுக்க, உண்மையான நம்பி நாராயணனுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பில் சூர்யா உறுதியாக இருந்ததாக மாதவன் முன்பு கூறியிருந்தார்; இதற்காக சூர்யா ஒரு பைசா கூட வாங்காமல் வேலை செய்தார். “இந்தி பதிப்பில் ஷாருக் ஜி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் படப்பிடிப்புக்கு வந்தபோது, ​​சூர்யா தனது சொந்த செலவில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தார், மேலும் அவர் சம்பளமாக ஒரு பைசா கூட வாங்கவில்லை என்றும் கூறிப்பிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actor surya shocked after seeing madhavan nambi narayanan getup