சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நடிகர் தாடி பாலாஜி பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் சின்னத்திரையின் பாக்கியலட்சுமி சீரியலில என்ட்ரி ஆகியுள்ளார்.
Advertisment
தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசியின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்த இந்த சீரியல் பாக்யா கோபி ராதிகா என மூன்று கேரக்டர்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் பாக்யாவை விட்டு தற்போது ராதிகாவுடன் வாழ்ந்து வரும் கோபி, ராதிகாவுடன் பாண்டிச்சேரிக்கு ஒரு திருமணத்திற்காக வந்திருக்கிறார்.
அதே திருமணத்திற்கு சமையல் செய்ய பாக்யாவும் வந்திருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த திருமண விழாவில் முக்கிய நபராக நடிகர் தாடி பாலாஜி என்ட்ரி ஆகியுள்ளார். சின்னத்திரையில் பிக்பாஸ், கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் போட்டியாளர் மற்றும் நடுவராக பங்கேற்ற தாடி பாலாஜி தற்போது சீரியலில் களமிறங்கியுள்ளார்.
பாக்யலட்சுமி சீரியலில் தாடி பாலாஜி
Advertisment
Advertisement
1997-ல் வெளியான நந்தினி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான தாடி பாலாஜி, அதனைத் தொடர்ந்து வாலி, சச்சின் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். மேலும் 1999-ம் ஆண்டு சின்னத்திரையில் ஒளிபரப்பான மாயா மச்சிந்ரா என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். இந்த சீரியலில் அவரது நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர் போட்டியாளர் நடுவர் என சின்னதிரையில் தனது ஆளுமையை செலுத்தினார்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி ஆகியுள்ள தாடி பாலாஜி பழனிச்சாமியின் பழைய நண்பராக நடித்துள்ளார். அதே சமயம் பாக்யா சமையல் செய்ய போகிறார் என்றதும் பிடிக்காதது போல் நடந்துகொள்ளும் பாலாஜி 3 நாளும் இவர்தான் சமையலா என்று சந்தேகத்துடன் கேட்கிறார். என் மீது நம்பிக்கை இல்லையா பாக்யா நல்லா சமைப்பாங்க என்று பழனிச்சாமி சொல்ல அரைமனதுடன் ஒப்புக்கொள்கிறார். அதன்பிறகு ராதிகாவும் கோபியும் வருகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“