/indian-express-tamil/media/media_files/p9CuljACxUFtAKJVH8l8.jpg)
நடிகர் விஜய் கேரளாவில்
தமிழகத்தை போலவே கேரளாவிலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அதிகமாக வைத்துள்ள நடிகர் விஜய் 14 வருடங்களுக்கு பிறகு கேரளாவிற்கு சென்றுள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், அவரின் கார் சேதமடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய், தமிழகத்தில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களில் முக்கியமானவராக திகழ்கிறார். தமிழகத்தை போலவே கேரளாவிலும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது. விஜய் படம் தமிழகத்தில் வெளியாகும்போது ரசிகர்கள் கொண்டாட்டத்தை போலவே கேரளாவிலும் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவது வழக்கமாக நடந்து வருகிறது.
Thalapathy Vijay has More Fans in Kerala than we expected!🤯💥 #Goat#TheGreastestOfAllTimepic.twitter.com/Thx1OxbM9c
— ✨ 𝑻𝒐𝒏𝒚𝒔𝒕𝒂𝒓𝒌 𝑽𝒇𝒄 :)- 🔥 (@King_offcll) March 19, 2024
இதனிடையே தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ளார். கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு வேலாயுதம் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்ற விஜய், 14 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கேரளாவுக்கு சென்றுள்ளார். இதனால் விஜயை பார்க்க ரசிகர்கள் பட்டாளம் விமான நிலையத்தில் திரண்டது.
Unseen:- Trivandrum Airport Fans Full View
— TD....❥ (@MiniiGirl__) March 19, 2024
Fans Are Surrounded Around The Thalapathy Vijay's Sea level love For @actorvijay 👑❤️🔥pic.twitter.com/kr8zFCsQwQ
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கிய நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், லியோ படத்தின் பாடல்களுடன் ஒலிக்கும் பல வீடியோ பதிவுகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரசிகர்கள் அதிகமாக சூழ்ந்ததால் நடிகர் விஜயின் கார் சேதமடைந்ததாக ஒரு வீடியோ பதிவும் வெளியாகியுள்ளது. டொயோட்டா ஹைப்ரிட் காரில் கண்ணாடிகள் உடைந்து சிதறிய நிலையில், கீறல்கள் விழுந்து முழுவதும் சேதமடைந்தது.
Video: Thalapathy Vijay's car damaged after massive fan turnout in Kerala #VIJAYStormHitsKeralapic.twitter.com/5gUceexTSI
— Webdunia Telugu (@WebduniaTelugu) March 19, 2024
சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய விஜய், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு விரைவில் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதால், இந்த தி கிரேட்டஸ்ட் ஆஃ.ப் ஆல் டைம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.