பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
சின்னத்தம்பி புரொடக்ஷன் படக் குழுவினர் நடிகர் தம்பி ராமையா தலைமையில் இன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து நாள் ஒன்றுக்கு சூட்டிங் எடுப்பதற்கான வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் .
தமிழ் சினிமாவில் பல படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிமாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அவ்வாறு வெளிமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தப்படும்போது பட தயாரிப்பு நிறுவனம் சார்ப்பாக அம்மாநில அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் அருகில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பெரும்பாலான தமிழ் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்புக்காக தயாரிப்பாளர்கள் தரப்பில் தினமும் ஒவ்வொரு துறையும் ரூபாய் 23,500 பிளஸ் ஜிஎஸ்டி வரியுடன் வசூலிக்கப்படுகிறது. இந்த வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று சின்னத்தம்பி புரொடக்ஷன் படக் குழுவினர் நடிகர் தம்பி ராமையா தலைமையில் இன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் இயக்குனர் அனீஸ் அஷ்ரப் எக்சிகியூட்டிவ் ப்ரொடியூசர் காசிலிங்கம் ஒளிப்பதிவாளர் அரவிந்த் குமார் பிஆர்ஓ குமரன் உள்பட பட குழுவினர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முக்கிய சாலைகளில் படப்பிடிப்பு எடுப்பதற்கு நகராட்சியில் ரூபாய் 5000 மட்டும் செலுத்தி படைப்பிடிப்பு எடுத்து வந்தோம் இதனால் ஆண்டுக்கு 450 விளம்பர படங்கள் எடுக்கப்பட்டது இதைப் பார்த்து சினிமா படப்பிடிப்பும் இங்கு அதிகமாக வர ஆரம்பித்து சினிமா படப்பிடிப்பும் எடுக்கப்பட்டது. இதைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருகை அதிகரித்தது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இங்கே போட்டோ சூட்டுக்காகவே வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு எடுப்பதற்கு ரூபாய் ஜி.எஸ்.டி உடன் சேர்த்து ரூ 23,500 செலுத்த வேண்டி உள்ளது. அதேபோன்று சீரியல் சூட்டிங் செய்வதற்கு ரூ.14,000 வசூலிக்கப்படுகிறது. இதனால் பெரிய பட தயாரிப்பாளர்கள் புதுச்சேரி எல்லைப் பகுதியான விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லை பகுதிகளில் படப்பிடிப்பை எடுக்கின்றனர்.
தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெய்லர் மற்றும் தனுஷ் படங்கள் புதுச்சேரி எல்லைப் பகுதியில் கடலூர் மாவட்டத்தில் படப்பிடிப்பு எடுத்தனர். அங்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 3 ஆயிரம் மட்டும் வசிப்பதாக முதல்வரிடம் தெரிவித்தனர். இதனால் புதுச்சேரியில் படப்பிடிப்புக்காக தொகையை குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தங்களிடம் பாக்கியராஜ், விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட நடிகர்கள் பலரும் மனு கொடுத்துள்ளனர்.
இதை பரிசீலனை செய்து முதல்வர் சூட்டிங் எடுப்பதற்கான நாள் கட்டணத்தை குறைக்க வேண்டும். என கேட்டுக்கொண்டனர். மேலும் திரைப்பட நகரம் அமைப்பதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.