scorecardresearch

என்னாது… வேடத்திற்கு ஏற்ற மாதிரி நடிச்சா ஆயுசு குறையுமா? சன் டி.வி விழாவில் மிரள வைத்த பிரபல நடிகர்

Tamil Serial Update : கேரக்டர் நடிகர்கள் என்றாலே தன்னிலை மறந்து கூடு விட்டு கூடு பாயிறதுதானே… சிரித்த மனநிலையில் இருப்பாவர்கள் அழும் மனநிலைக்கு மாறும்போது 5 நாட்கள் ஆயுசு கம்மியாகுது.

Tamil Serial Sun Kudumba Award Update : சின்னத்தரை ரசிகர்களை குஷிப்படுத்துவதில், சீிரியலுக்கு முக்கிய பங்கு உண்டு. குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் சண்டை பாசம், நட்பு துரோகம் உள்ளிட்ட பல நிலைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

குறிப்பாக சீரியல்கள் இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்து வருவதால், தொலைக்காட்சிகள் அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறங்கி வருகினறனர். அந்த வகையில் ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் கொடுப்பதில் சன்டிவிக்கு பெரிய பங்கு உண்டு. இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இதில் சீரியல்கள் ம்ட்டுமல்லாது சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளை வைத்து ரியாலிட்டி ஷோக்கள் நடத்துவது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வரும் சன்டியில் சிறப்பாக சீரியல் மற்றும் நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. இதில் சன் குடும்ப விருதுகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சன் குடும்ப விருதுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த குணச்சித்திர நடிகைக்காக விருதை வழங்க நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையா மேடைக்கு அழைக்கப்பட்டு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதுக்கான போட்டியில் உள்ள நடிகைகளின் வீடியோக்கள் ஒளிரப்பு செய்யப்பட்டது.

இதில் சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகை அனுவுக்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை நடிகர் தம்பி ராமையா வழங்கினார். விருது வழங்குவதற்கு முன்பு பேசிய தம்பி ராமையா, கேரக்டர் நடிகர்கள் என்றாலே தன்னிலை மறந்து கூடு விட்டு கூடு பாயிறதுதானே… சிரித்த மனநிலையில் இருப்பாவர்கள் அழும் மனநிலைக்கு மாறும்போது 5 நாட்கள் ஆயுசு கம்மியாகுது. கேஷ்யூலா இருக்கும்போது உடலை வருத்தி… இதயத்தை இறைவன் மெலடியாக கவித்துவமாக சுவாசிக்க கொடுத்திருக்கிறார்.

அதை கலைஞர்கள் நடிகர் நடிகைகள் கதாப்பாத்திரமாக மாறும்போது ஒட்டுமொத்த உணர்வுகளையும் ஒன்றாக உள்வாங்கி அந்த வசனத்தை வார்த்தையின் அர்த்தத்தை புரிந்துகொள்ளும் வகையில் பேசுவதற்காக மெனக்கெடுகிற பொழுது நிச்சயமாக ஒவ்வொரு நடிகர் நடிகைகளுக்கு பின்னால் ஆயுசு குறைவாக உள்ளது. இது உளவியல் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actor thambi ramaiyah speech in sun kudumba award function