சீமான், திருமாவுக்கு விஜய் வாழ்த்து : எக்ஸ் தளத்தில் வெளியான முக்கிய பதிவு

சுயேச்சையாக போட்டியிட்டு பல இடங்களில் 3-வது இடம் பிடித்து, 12 தொகுதிகளில் 1 லட்சத்திற்கு மேல் வாக்குகளை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 8.22 ஆக உள்ளது.

சுயேச்சையாக போட்டியிட்டு பல இடங்களில் 3-வது இடம் பிடித்து, 12 தொகுதிகளில் 1 லட்சத்திற்கு மேல் வாக்குகளை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 8.22 ஆக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay Seeman And Tiruma

விஜய் - சீமான் - திருமாவளவன்

சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிகபட்ச வாக்குகள் பெற்று மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ள நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன 1-ந்தேதி வரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கடந்த ஜூன் 4-ந் தேதி நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களிலும், பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 290 இடங்களிலும் வெற்றியை பெற்றிருந்தது.

ஆட்சி அமைப்பதற்காக எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக தெலுங்கு தேசம் மற்றும் நித்தீஷ்குமாரின் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே தமிழகத்தை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி வாகை சூடியது. தமிழகத்தின் எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

Advertisment
Advertisements

அதே சமயம் சுயேச்சையாக போட்டியிட்டு பல இடங்களில் 3-வது இடம் பிடித்து, 12 தொகுதிகளில் 1 லட்சத்திற்கு மேல் வாக்குகளை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 8.22 ஆக உள்ளது. மாநில கட்சி அந்தஸ்து பெற வேண்டும் என்றால், 8 சதவீதம் வாக்குகள் பெற வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி அதைவிட அதிக வாக்குகள் பெற்றதால், தற்போது அக்கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.

அதேபோல் திமுக கூட்டணியில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் மாநில கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. இதன் காரணமாக இரு கட்சி தொண்டர்களும் மகிழ்ச்சியில் உள்ள நிலையில், இரு கட்சிகளுக்கும் நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Seeman Thalapathy Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: