scorecardresearch

‘கெட்ட பழக்கம் காரணம் இல்லை; ஏதோ ஒண்ணு நடந்து போச்சு!’ விஜயகாந்த் பற்றி உருகிய வாகை

கெட்டப்பழக்கங்கள் இருந்தது என்றெல்லாம் சொல்வார்கள். எத்தனையே நடிகர்கள் என்னன்னமோ பழக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் இப்போது நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

Vaagai ChandraSekar
நடிகர் வாகை சந்திரசேகர்

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனது தனித்திறமையால் வெற்றி கண்ட நடிகர் விஜயகாந்த் தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்து வரும் நிலையில், அவருக்கு வேற எதோ நடந்துள்ளது என்று நடிகரும் விஜயகாந்தின் நெருங்கிய நண்பருமான வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், அரசியலில் குறுகிய காலத்தில் முத்திரை பதித்தவர் என்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த். 1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த், சட்டம் ஒரு இருட்டறை, நீதி பிழைத்தது, ஈட்டி, நூறாவது நாள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

விருதகிரி என்ற படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் முத்திரை பதித்தவர். தான் நடிகராக இருந்த காலகட்டத்திலும், அரசியலில் இருந்து காலட்டத்திலும் ஏராளமாக உதவிகளை செய்துள்ள விஜய்காந்த், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கு சமமான உணவு வழக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்தவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்

மேலும் நண்பர்களுக்காக எதையும் செய்யக்கூடிய விஜயகாந்த் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகியுள்ள விஜயகாந்த் குறித்து பிரபலங்கள் பலரும் நாள்தோறும் பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் வாகை சந்திரசேகர் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திரையுலகில், நான், விஜயகாந்த், ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், தியாகு, மணிவன்னன் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். நானும் விஜயகாந்தும் நடிக்க வாய்ப்பு தேடிய காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். சினிமாவை தாண்டி குடும்பம் தொடர்பான நிகழ்வுகளிலும் நாங்கள் இருவரும் நெருக்கமானவர்கள். அதேபோல் விஜயகாந்த் மிகவும் காமெடி சென்ஸ் உள்ளவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் சிரிக்கவைத்துக்கொண்டே இருப்பார்.

அதேபோல் நாங்கள் எங்கு சென்றாலும், எதாவது பிரச்சனை என்றால் எதைப்பற்றியும் யோசிக்காமல் களத்தில் இறங்கிவிடுவோம். அப்படித்தான் செந்தூரப்பூவே ஷூட்டிங்கின்போது இரவு நேரத்தில் சவுக்கு தோப்பில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது சிலர் குடித்துவிட்டு வந்து பிரச்னை செய்தனர். மேலும் நடிகர் செந்திலை அடிக்க சென்றுவிட்டனர். உடனடியாக நானும் விஜயகாந்தும் அவர்களிடம் பேசினோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதனால் அவர்கள் அனைவரையும் அடிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. விஜயகாந்த் ரியல் சண்டை இது.

இந்த சம்பவம் காரணமாக இந்த கிராமமே ஒன்றுகூடிவிட்டது. அதன்பிறகு போலீஸ்க்கு தகவல் கொடுத்து அந்த பிரச்சனையை சரி செய்தோம். இது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளது. அரசியலில் நாங்கள் வெவ்வேறு பாதையில் சென்றிருந்தாலும், வெளி நிகழ்ச்சிகளில் பார்க்கும்போது அரசியல் பேச்சுக்களை மறந்து நெருங்கிய நண்பர்களாகத்தான் இருந்தோம்.

இப்போது விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். ராதாரவி கூட அவரை பார்க்க விடமாட்டேன்கிறார்கள் என்று சொன்னார். ஆனால் நான் விஜயகாந்தை பார்த்தால் அழுதுவிடுவேன். அதனால் தான் நான் பார்க்காமல் இருக்கிறேன். அவரை பார்த்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிறது. ஆனால் நட்பு வட்டாரத்தை பார்த்தால் விஜயகாந்த் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்று ராதாரவி சொல்கிறார்.

அப்படி எதாவது நடக்கும் என்று இருந்தால் நான் அவரை சந்திக்க தயார். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததில் இருந்து நான் விஜயகாந்தை பார்க்கவில்லை. விஜயகாந்த் என்று நினைத்தாலே எனக்கு அவர் பழைய மாதிரிதான் நினைவில் இருக்கிறது. சிறுவயதில் எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்கும் சாவே கிடையாது என்று நினைத்தேன். அதே மாதிரிதான் விஜயகாந்துக்கும் சாவே இல்லை என்று நினைத்தக்கொண்டிருக்கிறேன்.

நல்ல நண்பன் எதனால் அவருக்கு இந்த மாதிரியான ஒரு நிலை ஏற்பட்டது? கெட்டப்பழக்கங்கள் இருந்தது என்றெல்லாம் சொல்வார்கள். எத்தனையே நடிகர்கள் என்னன்னமோ பழக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் இப்போது நன்றாகத்தான் இருக்கிறார்கள். அதனால் விஜயகாந்த் இந்த நிலைக்கு கெட்டப்பழக்கம் காரணம் அல்ல வேறு எதோ ஒரு விஷயம் நடந்துள்ளது. அது மாறனும். மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மாறவில்லை என்றாலும் என் பழைய விஜயகாந்த் மட்டுமே என் மனதில் இருப்பார் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actor vaagai chandrasekar said about his friend vijayakanth