/indian-express-tamil/media/media_files/2025/04/24/VReZq1mGxa9QhPkcXIvA.jpg)
சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு முழுக்க முழுக்க காமெடி கேரக்டரில் நடித்துள்ள, கேங்கர்ஸ் திரைப்படம் இன்று (ஏப்ரல் 24) வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரமோஷன் தொடர்பான நேர்காணல்களில், வடிவேலு பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். இதில் நடிகர் விவேக் குறித்து அவர் பேசியது தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் வடிவேலு. இவரைப்பற்றி பல விமர்சனங்கள, மற்றும் சக நடிகர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் அதிகம் இருந்தாலும், இவரது காமெடிக்கான ரசிகர்கள் பட்டாளம் குறையாமல் இருக்கிறது. அதனை நிரூபிக்கும் வகையில், 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, சுந்தர்.சி – வடிவேலு கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ள கேங்கர்ஸ் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இன்று வெளியான கேங்கர்ஸ் திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வடிவேலு மீண்டும் வந்துவிட்டார் என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே இந்த படம் தொடர்பான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த வடிவேலு, ஒரு நிகழ்ச்சியில், தனது நெருங்கிய நண்பர் விவேக்கின் மரணத்தின்போது ஏன் நேரில் சென்று விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து பதில் அளித்துள்ள வடிவேலு, விவேக்கின் இறப்பு தாங்க முடியாத வலி. அவன் இறப்புக்கு நான் போகவில்லைனு நிறைய பேர் சொன்னாங்க. ஆனால் வீட்டுக்கு எல்லாம் சென்று, விவேக்கின் மனைவி, குழந்தைகள் அனைவரிடமும் துக்கம் விசாரித்தேன். விவேக் இறப்பான்னு நான் நினைக்கவே இல்லை. அவன் இறந்த காலகட்டத்தில் நானே ரொம்பவும் மோசமாகத்தான் இருந்தேன். எங்க வீட்டுலயே ஒருததர ஒருத்தர் பாத்துட்டு பயந்துட்டு இருந்தாங்க. அதனால்தான் போகவில்லை" என பதில் அளித்துள்ளார்.
பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் செனலில், பேசிய வடிவேலு, நீயா நானா கோபிநாத் கேட்ட கேள்விக்கு இந்த பதிலை தெரிவித்துள்ளார். விவேக் மரணம் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, கேப்டன் விஜயகாந்த் மரணத்திற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன் என்பது குறித்த தெளிவுபடுத்த வேண்டும் என்பது நெட்டிசன்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.