பணக்காரர்… உதவி இயக்குநர்… நடிகர்… அடையாளத்திற்காக போராட்டம் … பிக்பாஸ் வருண் கடந்து வந்த பாதை

Tamil Biggboss Season 5 : சினிமா மீது அதீத மோகம் கொண்ட வருண், தனது திரை பயணத்தை சாதாரண உதவி இயக்குனராக தொடங்கியுள்ளார்

Bigg Boss Actor Varun Lifestyle Update : சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பல தரப்பினரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக பல புதுமுகங்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில், இமான் அண்ணாச்சி, பிரியங்கா வருண் ஆகியோர் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானவர்களாக உள்ளனர். 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில், திருநங்கை நமீதா மாரிமுத்து போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் வருண் ஐசரி வேலனின் பேரன் மற்றும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மருமகன் ஆவார். பணக்கார குடும்பத்தில்  பிறந்தாலும் எளிமையாக இருக்கும் வருண், நண்பர்களுடன் வெளியில் செல்வது, சைக்கிளிங், ட்ரக்கிங் என வழக்கமான ஜாலி நபராக வலம் வருகிறார். மேலும் மற்ற்றவாகளிடம் பழகுவதற்கும் எளிமையாக இருப்பாராம்.  

சினிமா மீது அதீத மோகம் கொண்ட வருண், தனது திரை பயணத்தை சாதாரண உதவி இயக்குனராக தொடங்கியுள்ளார். இயக்குனர் ஏ.ல்.விஜய்யிடம் சில ஆண்டுகள் உதவி இயக்குனராக இருந்த வருண், விஜய் நடித்த தலைவா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்கு முன்பே பரிமளா திரையரங்கம் என்னும் படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தலைவா படத்திற்கு பிறகு ஒருநாள் இரவில், போகன், கோமாளி, வனமகன், பப்பி, ,நெருப்புடா, சீறு என பல படங்களில் நடித்துள்ளார்.

அதில் இவர் நாயகனாக நடித்திருந்த பப்பி படம் இவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது. தற்போது கவுதம் மேன்ன் இயக்கத்தில் ஜோஷ்வா இமைபோல் காக்க என்றும் படத்தில் நாயகனாக நடித்து முடித்துள்ள வருண், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5-ல் பங்கேற்றுள்ளார். தனக்கென தனி அயடையாளத்தை உருவாக்க போராடும் வருண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து தனது நண்பர்களுடன் கலந்து பேசினாராம்.

இதில் சிலர் நெகடிவ் விமர்சனங்கள் குறித்து பேசி அட்வைஸ் செய்துள்ளனர். ஆனாலும் தனக்காக அடையாளத்தை பெறுவதற்காகவும், வருண் என்றால் யாரு? என்ற இமேஜ் மக்களுக்கு தெரிய வேண்டும் என்று நோக்கத்திற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்திருக்கிறார். இனி வரும் நாட்களில் வருண் யார் என்பது மக்களுக்கே தெரிய வரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil actor varun lifestyle and bigg boss season 5 contestant

Next Story
பிக் பாஸில் அழுது வடியும் தாமரைச்செல்வியா இது? கிராம விழாவில் என்னா டான்ஸ்!Bigg Boss 5 Tamil Thamarai Selvi Viral Video Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X