New Update
/indian-express-tamil/media/media_files/95DPx8FtV3uLs46fLDnS.jpg)
நடிகர் விஜய்
/
நடிகர் விஜய்
கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தற்போது ஷீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
லியோ படத்திற்கு பிறகு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் முழு நேர அரசியலில் களமிறங்குவதால் இந்த படம் அவரது கேரியரில் கடைசி படமாக இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது. அதே சமயம் விஜய் தனது அடுத்த படத்தை தேர்வு செய்துவிட்டதாகவும், இந்த படத்தை தீரன், வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
#ThalapathyVIJAY - Most secular Kollywood actor of all time ❤️ pic.twitter.com/9iT8ChXeBO
— Actor Vijay Fans (@Actor_Vijay) April 8, 2024
இதனிடையே கோட் படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் ஷீரடி சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.