தளபதி விஜய் நடித்துள்ள லியோ மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்ற சித்தா திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் நாட்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நவம்பர் 3-வது வாரமான இந்த வாரம் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் வெப் சிரீஸ்கள் வெளியாக உள்ளது. இதில், நெட்ப்ளிக்ஸில் வரும் நவம்பர் 24-ந் தேதி லியோ படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய தளபதி விஜய்யின் பான்-இந்தியன் அதிரடித் திரைப்படமாக வெளியாக வெளியான லியோ, தமிழ் சினிமாவில் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. நவம்பர் 28 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
சித்தார்த் நடிப்பில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்த சித்தா படம் நவம்பர் 28-ந் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய இந்த படத்தில் சித்தார்த் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் பிரச்சினையை உணர்வுப்பூர்வமாக எடுத்ததற்காக இந்தப் படம் பெரிதும் பாராட்டப்பட்டது.
'அவள்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மிலின் ராவ் இயக்கியுள்ள புதிய வெப்சிரீஸ் தி வில்லேஜ். ஆர்யா நாயகனாக நடித்துள்ள இந்த சிரீஸ் ஒரு மர்மமான கிராமத்தைச் சுற்றி வரும் ஜாம்பி அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சிரீஸ் அமேசான் பிரைம் வீடியோவில் நவம்பர் 24 அன்று வெளியாகிறது.
ஐஎம்.டி.பி-யில் 9.2 ரேட்டிங்கைப் பெற்ற படங்களில் படங்களில் ஒன்றாக சத்திய சோதனை படத்தில் பிரேம்கி அமரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தை 'ஒரு கிடயின் கருணை மனு' புகழ் சுரேஷ் சங்கையா இயக்கியிருந்தார் இந்த படம் சோனி லிவ்வில் நவம்பர் 24 அன்று அறிமுகமாகிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட திகில் படமான அரக்கன் (தமிழ்) ஆஹா ஒடிடி தளத்தில் நவம்பர் 24 அன்று வெளியாக உள்ளது.
ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள த்ரில்லர் கதையசம்சனம் கொண்ட புலிமடா (மலையாளம்) திரைப்படம் ஒரு திருமணத்தின் பின்னணியில், ஒரு மனிதனைத் தின்னும் புலி அவிழ்த்துவிடப்பட்ட செய்தியால் வரும் விபரீதங்களை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் நெட்பிளிக்ஸில் நவம்பர் 23ஆம் தேதி வெளியாகிறது. சாவர் என்ற மலையாள திரைப்படம் நவம்பர் 24-ந் தேதி சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
ஃபுக்ரே 3 (ஹிந்தி) என்ற சூப்பர் ஹிட் நகைச்சுவைத் திரைப்படம் நவம்பர் 23 (இன்று) ந் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இந்தி நடிகர் நானா படேகர், அனுபம் கெர், பல்லவி ஜோஷி மற்றும் ரைமா சென் ஆகியோர் நடித்த தடுப்பூசி அரசியலைப் பற்றிய புதிய படமான தி வாக்சின் வார் (இந்தி) நவம்பர் 24 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
குடுக்கு 2025 (மலையாளம்) என்ற ஒரு எதிர்கால மர்மத் திரில்லர் திரைப்படம் நவம்பர் 24 அன்று சாய்னா ப்ளே என்ற ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சமோசா அண்ட் சன்ஸ் (ஹிந்தி) என்ற படம் ஜியோ சினிமாவில் நவம்பர் 23 அன்று வெளியாகியுள்ளது. மை டெமான் (கொரியன்) - நெட்ஃபிக்ஸ் தொடர் நவம்பர் 24-ல் வெளியாக உள்ளது. குட் ஓல்ட் டேஸ் (தெலுங்கு) என்ற ஜியோ சினிமா தொடர் நவம்பர் 23ல் வெளியாகிறது.
இஸ்தான்புல்லுக்கு (துருக்கி) லாஸ்ட் கால் என்ற படம்- நெட்ஃபிக்ஸ் - நவம்பர் 24ந் தேதி வெளியாக உள்ளது. சூசைடு கேம் தி சேலஞ்ச் (Squid Game The Challenge (E) - பிளாட்ஃபார்மின் மாபெரும் வெற்றி 'ஸ்க்விட் கேம்' தொடரை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரியாலிட்டி கேம் ஷோ, மக்கள் பெரும் விலைக்கு உயிருக்கு ஆபத்தான சவால்களை எதிர்கொள்வதைப் பற்றியது. நெட்ப்ளிக்ஸில் நவம்பர் 23 அன்று ஒளிபரப்பாகிறது. ஆம் ஆத்மி ஃபேமிலி சீசன் 4 (இந்தி) – நவம்பர் 24-ல் ஜீ5-ல் வெளியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“