scorecardresearch

அஜித் என் மகன் தான்… விஜய்-க்கு அம்மாவா நடிக்கணும்… மனம் திறக்கும் விஜய் அம்மா

அஜித் மனைவி ஷாலினி இப்போதும் எங்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். காலையில் நடைப்பயிற்சி செய்யும்போது அவர்களை பார்ப்பேன்

அஜித் என் மகன் தான்… விஜய்-க்கு அம்மாவா நடிக்கணும்… மனம் திறக்கும் விஜய் அம்மா

தொழில் ரீதியான போட்டிகள் இருந்தாலும் விஜய் அஜித் எப்போதுமே நல்ல நண்பர்கள் என்று நடிகர் விஜயின் அம்மா ஷோபா கூறியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி கமல் ஆகியோருக்கு அடுத்தப்படியாக பெரிய போட்டி என்று சொல்லக்கூடிய முக்கிய நடிகர்கள் விஜய் அஜித். இருவரும் தனித்தனியாக தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் அதிகப்படியான ரசிகர்களை வைத்துள்ளனர். இவர்கள் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவது வழக்கம்.

அதே சமயம் இருவரின் படங்களும் ஒன்றாக வெளியானால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் துணிவு விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய இரு படங்களும் நேற்று (ஜனவரி 11) வெளியானது. வெவ்வேறு கதைக்களங்களை கொண்ட இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சினிமாவில் அஜித் விஜய் இடையே போட்டி இருந்தாலும் ரியல் லைஃபில் இருவரும் நண்பர்கள் என்று பலரும் சொல்ல கேட்டிருக்கிறோம். இதை அஜித் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியிலேயே தெரிவித்திருந்தார். அவர்களின் ரசிகர்கள் அப்படி கிடையாது. சமூக வலைதளங்களங்களில் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொள்வது இன்றளவும் நடந்து வருகிறது.

இதனிடையே விஜய் போல் அஜித்தும் என் மகன்தான் என்று விஜயின் அம்மா ஷோபா அளித்த பேட்டியில் கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாரிசு துணிவு இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவது குறித்து பேசியுள்ள ஷோபா சந்திரசேகர், விஜய் மாதிரி அஜித்தும் எனது மகன்தான் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் குஷி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அஜித், நானும் விஜயும் சேர்ந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடிக்கும்போது விஜய் அம்மா விஜய்க்கு மட்டும் அல்லாமல் எனக்கும் சேர்த்து சாப்பாடு கொடுத்து விடுவார். இதை என்னால் மறக்கவே முடியாது என்று அஜித் கூறினார். நான் ஏன்பா இதை மேடையிலே சொன்னனு கேட்டேன். இதை என்னால் மற்றக்கவே முடியாது அதனால்தான் சொன்னேன் என்று கூறினார்.

அதேபோல் அஜித் மனைவி ஷாலினி இப்போதும் எங்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். காலையில் நடைப்பயிற்சி செய்யும்போது அவர்களை பார்ப்பேன் சிலமுறை அஜித்தும் வருவார். அஜித் விஜய் இருவரும் ஃபேமிலியுடன் பலமுறை வெளியில் சென்றுள்ளனர். இதை நானே பார்த்திருக்கிறேன். பலமுறை கேள்விப்பட்டிருக்கேன் என்று கூறியுள்ளார்.

நான் விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று அசைப்படுகிறேன். இதை ஒருமுறை அவரிடமும் சொன்னேன். ஆனால் உங்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு வந்துவிடும். அப்புறம் எப்படி நடிக்கிறது நாம விளம்பரை படங்களில் நடிக்கலாம் என்று என்னை சமாதானப்படுத்திவிட்டார். ஆனால் நான் இப்போதும் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த பேட்டியில் முதலில் நீங்கள் துணிவு பார்க்க போகிறீர்களா அல்லது வாரிசு படத்தை பார்க்க போகிறீர்களாக என்ற கேள்விக்கு ஷோபா நான் இரண்டையுமே முதல் நாளில் பார்க்க வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actor vijay mother say about varisu and thunivu movie