scorecardresearch

விஜய் செய்த சம்பவம்; உடனே பதில் மெசேஜ் கொடுத்த ஷாருக் கான்; பலமாகும் நட்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு பதான் படம் வரும் ஜனவரி 25-ந் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

விஜய் செய்த சம்பவம்; உடனே பதில் மெசேஜ் கொடுத்த ஷாருக் கான்; பலமாகும் நட்பு

இந்த தாழ்மையான காரணத்திற்காகத்தான் நீங்கள் தளபதி என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிகர் விஜய் குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.  

பாலிவுட் பாட்சா என்று அழைக்கப்படும் முன்னணி நடிகரு ஷாருக்கான். தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் பிஸியாக நடித்து வரும் ஷாருக்கான் நடிப்பில் தயாராகியுள்ள படம் பதான். தீபிகா படுகோனே நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ஜான் ஆபிரகாம் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு பதான் படம் வரும் ஜனவரி 25-ந் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. விஷால் சேகர் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்துள்ளது. அதே சமயம் படத்தில் பாடல் காட்சி ஒன்றில் நாயகி தீபிகா படுகோனே அணிந்திருந்த உடை சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனிடையே பதான் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளிலும் பதான் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பதான் படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். விஜயின் வாரிசு படம் நாளை வெளியாக உள்ள நிலையில், விஜய் ஷாருக்கான் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. அதேபோல் விஜய் தனது ட்விட்டர் பதிவில் மற்றொரு நடிகரின் பட டிரெய்லரை முதல் முறையாக பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், தனது படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் விஜய்க்கு நன்றி சொல்லும் விதமாக ஷாருக்கான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது கவனம் ஈர்த்துள்ளது. இந்த பதிவில், என்து நண்பர் விஜய்க்கு நன்றி. இந்த தாழ்மையான குணத்தின் காரணமாகத்தான் நீங்கள் தளபதி. விரைவில் ஒரு சுவையான விருந்தில் சந்திப்போம் லவ் யூ என்று பதிவிட்டுள்ளார். ஷாருக்கானின் இந்த பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actor vijay released pathan trailer actor shah rukh khan said thanks