விஜயின் ஆசையை நிறைவேற்றாத ரஜினிகாந்த்... விஜய் அப்படி என்ன ஆசைப்பட்டார்?
தினமும் நியூஸ் பேப்பர் படிக்கும்போது மற்ற விஷயங்களை பார்த்துவிட்டு முக்கியமாக ஒரு விஷயத்தை தேடுவோம். அது ரஜினி சார் அடுத்து என்ன படத்தில் நடிக்க உள்ளார் என்பதுதான்.
தினமும் நியூஸ் பேப்பர் படிக்கும்போது மற்ற விஷயங்களை பார்த்துவிட்டு முக்கியமாக ஒரு விஷயத்தை தேடுவோம். அது ரஜினி சார் அடுத்து என்ன படத்தில் நடிக்க உள்ளார் என்பதுதான்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்களின் நலனுக்காக அரசியலுக்கு வர வேண்டும் என்று நடிகர் விஜய் கூறிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கடந்த 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், தொடர்ந்து மூன்று முடிச்சு, 16 வயதினிலே, ஆயிரம் ஜென்மங்கள், முல்லும் மலரும், பைரவி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நடித்த ரஜினிகாந்த் பின் நாளில் பைரவி படத்தின் மூலம் தனி ஹீரோவாக நடித்து தற்போது அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள தமிழ் சினிமா நடிகர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்.
பிளாக் அன்ட் வொயிட் படம் தொடங்கி தற்போதை டிஜிட்டல் சினிமா வரை உள்ள அனைத்து வகை ரசிகர்களையும் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலால் கட்டிப்போட்டுள்ள ரஜினிகாந்த், நடிப்பில் வெளியான படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், உள்ளிட்ட பல படங்கள் தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட வசூலி வேட்டை நடத்திய படங்களாக உள்ளன. தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் கலெக்ஷன் நடத்திய படங்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் டாப் 10-ல் ரஜினியின் சில படங்களை சொல்லாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ரஜினியின் படங்கள் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. தற்போது அவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே ரஜினிகாந்த் சினிமாவில் சாதித்தது போன்று அரசியலிலும் கால்பதிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்பினர். அதேபோல் தானும் அரசியலில் ஈடுபட உள்ளதாக பல ஆண்டுகளாக தெரிவித்து வந்த ரஜினிகாந்த் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், இது முழுக்க முழுக்க ஆன்மீகம் சார்ந்த அரசியல் கட்சியாக இருக்கும் என்று அறிவித்திருந்தார்.
Advertisment
Advertisements
ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்பிய அவர், தனது உடல்நிலையை காரணம் காட்டி தான் தற்போது அரசியல் கட்சி தொங்கும் முடிவை கைவிட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த ரஜினி ரசிகர்கள் பலரும் மாற்று கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு நேரலையில் பேசிய நடிகர் விஜய், சமீபத்தில் எனது நண்பர் சூர்யா ஒரு பங்ஷனில் பேசும்போது ஒரு விஷயம் சொன்னார். தினமும் நியூஸ் பேப்பர் படிக்கும்போது மற்ற விஷயங்களை பார்த்துவிட்டு முக்கியமாக ஒரு விஷயத்தை தேடுவோம். அது ரஜினி சார் அடுத்து என்ன படத்தில் நடிக்க உள்ளார் என்பதுதான். அதே மாதிரிதான் நானும்.
வெள்ளிமலர் தினங்கள் வரும்போது ரஜினிசார் பற்றி எதாவது நியூஸ் வருமா என்று பார்பேன். சார் என்னை மாதிரி உள்ள எத்தனையோ ரசிகர்களுக்காகவும், எல்லாருக்காகவும் சீக்கிரமா ஒரு படம் பண்ணுங்க. அப்போவும் சரி இப்போவும் சரி நான் அவருடைய ஃபேன் தான். தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் நானும் ஒருவன்.
ஒரு ரசிகனா இல்லாம ஒரு சாதாரண மனிதனா நான் என்ன ஆசைப்படுகிறேன் என்றால் அவர் அரசியலுக்கு வரனும் அதுதான் என்னுடைய விருப்பம் என்று கூறியுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக தளபதி விஜயின் ஆசையை இன்று வரை ரஜினிகாந்த் நிறைவேற்றவேற்றவே இல்லை. இனிமேலும் நிறைவேற்றப்போவதில்லை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“