/indian-express-tamil/media/media_files/1F5tTDeJLZBE0faT7MJQ.jpg)
மகாராஜா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில், தயாராகி வரும் மகாராஜா படம் குறித்து பெரிய அறிவிப்பு நாளை வெளியாகும் என்று படக்குழு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி தற்போது நாயகனாக பல படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமல்லமல், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி நாயகன் மட்டுமல்லாமல், வில்லன் மற்றும் முக்கிய கேரக்டர்களிலும் நடித்து அசத்தி வருகிறார். இதனால் மற்ற மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது,
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் இந்தியில் வெளியான மெர்ரி கிறிஸ்துமஸ், மற்றும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் என இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. தற்போது விஜய் சேதுபதி தமிழில் தனது 50-வது படமாக மகாராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Sound the trumpets..
— Nithilan Saminathan (@Dir_Nithilan) May 28, 2024
the #Maharaja👑 is arriving 🔥#MakkalSelvan@VijaySethuOffl@anuragkashyap72@mamtamohan@Natty_Nataraj@Abhiramiact@AjaneeshB@Philoedit@DKP_DOP@Selva_ArtDir@rajakrishnan_mr@ActionAnlarasu@PassionStudios_@TheRoute@Sudhans2017@jagadishbliss… pic.twitter.com/MF0chnMrxM
2017-ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்பை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நித்திலன் சுவாமிநாதன் இயக்கி வரும் இந்த படத்தில், அதிரடி நாயகனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி கத்தியுடன் காதில் காயத்துடன் அமர்ந்திருந்தார். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. இதனிடையே நாளை (மே 29) மகாராஜா படத்தின் பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியிலி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.