Advertisment

சினிமா வாழ்க்கையில் முதல் முறை : விஜய் கொடுக்கும் டபுள் ட்ரீட் ; கோட் அப்டேட் கொடுத்த யுவன்!

2003-ம் ஆண்டு வெளியான புதிய சீதை படத்திற்கு பின் விஜய் – யுவன் சங்கர் ராஜா இருவரும் மீண்டும் இணைந்துள்ள இந்த படம் இசையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
 Goat Movie Poster

கோட் படத்தில் விஜய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் தனது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் வகையில் ஒரு செயலை செய்துள்ளதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய், சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் (கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) என்ற படத்தில் நடித்துள்ளார்.

மைக் மோகன் வில்லனாக நடித்தள்ள இந்த படத்தில் பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல், உள்ளிட்ட பல முன்னணி நடச்த்திரங்கள் நடித்துள்ளனர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 5-ந் தேதி கோட் படம் வெளியாக உள்ளது. அதிக பட்ஜெட்டில் உருவாகும் ஃபேண்டஸி படமான கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகநடிகர் விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர்.

2003-ம் ஆண்டு வெளியான புதிய சீதை படத்திற்கு பின் விஜய் – யுவன் சங்கர் ராஜா இருவரும் மீண்டும் இணைந்துள்ள இந்த படம் இசையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சமீபத்தில் வெளியான விசில் போடு பாடல் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் தனது படங்களில் பாடல் பாடுவதை வழக்கமாக வைத்துள்ள விஜய் இந்த பாடலை பாடியிருந்தார்.

தான் திரைப்படங்களில் ஹீரோவாக அறிமுகமான காலக்கட்டத்தில் இருந்து தனது படங்களில் பாடல் பாடுவதை வழக்கமாக வைத்துள்ள நடிகர் விஜய், சமீப காலமாக தான் நடித்து வரும் அனைத்து படங்களிலும் தொடர்ந்து பாடல் பாடி வருகிறார். அந்த வகையில் இவர் பாடிய அனைத்து பாடல்களுமே ரசிகர்க்ள மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் விசில்போடு பாடலும் விஜய் ரசிகர்கள் மத்தியில் திருப்தியை ஏற்படுத்தியது.

இதனிடையே விஜய் தனத சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு படத்தில் 2 பாடல்களை பாடியுள்ளார் என்று படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் விஜய் பாடிய முதல் பாடலான விசில் போடு சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து 2-வது பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment