தளபதி விஜயின் மகள் சஞ்சய் நடிப்பதற்கு தயார் என்றால் என் மகளை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று தனக்கு ஆசை உள்ளதாக நடிகை தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை தேவயானி, தொட்டாஞ்சிணுங்கி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கல்லூரி வாசல், காதல் கோட்டை, மருமலர்ச்சி, என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் அஜித், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த தேவயானி, தமிழ் சினிமாவின் ஹோம்லி நடிகை என்று பெயரெடுத்தவர்.
பல வெற்றிப்படங்களை கொடுத்து தன்னை ஒரு முன்னணி தமிழ் நடிகையாக நிலை நிறுத்திக்கொண்ட தேவயானி, இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து பெற்றோரின் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய தேவயானி, சின்னத்திரையில் என்டரி ஆனார். இதில் கோலங்கள் சீரியல் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. தற்போது சின்னத்திரையில் நடித்து வரும் தேவயானி, தனது சொந்த ஊரில் விவசாயமும் செய்து வருகிறார்.
தேவயானி ராஜகுமாரன் தம்பதிக்கு இனியா பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் இனியா சமீபத்தில் 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். தற்போது கல்லூரியில் படித்து வரும் அவரை சினிமாவில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் தேவயானியை அணுகியதாக கூறப்படுகிறது. இதனிடையே தனது மகளை ஹீரோயினாக அறிமுகப்படுத்துவது குறித்து ராஜகுமாரன் சமீபத்தில் பேசியுள்ளார்.
ராஜகுமாரன் இயக்கத்தில் பார்த்திபன் தேவயானி நடித்த நீ வருவாய் என படத்தில் நடிகர் அஜித் முக்கிய கேரக்ரில் நடித்திருந்தார். இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போன நிலையில், அஜித் அந்த கேரக்டரில் நடித்து படமும் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இந்த படத்தின் 2-ம் பாகத்தை இயக்க உள்ளதாகவும், இதில் தனது மகளை ஹீரோயினாகவும், விஜய் மகன் சஞ்சய்யை ஹீரோவாகவும் நடிக்க வைக்க விரும்புவதாக தனது விருப்பத்தை கூறியுள்ளார் ராஜகுமாரன்.
தளபதி விஜய்யின் மகன் ஜோசன் சஞ்சய் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வைக்க சில இயக்குனர்கள் அணுகிய நிலையில், அவர் இயக்குனராக விரும்புவதாக கூறியுள்ளா. மேலும் அவர் சில ஷாட்ஃபிலிம்களை இயக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், எதை செய்தாலும் அவரின் விருப்பம் என்று விஜயும் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இயக்குனர் ராஜகுமாரனின் விருப்பம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/