லியோ படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 68-வது படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படம் குறித்து தற்போது புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில், படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தில் இளம் வயதில் விஜயயை காட்ட வேண்டும் என்பதற்காக டிஜிங் டெக்னிக் நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது தளபதி 68 படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி படத்தில் விஜய் இளமை தோறறத்தில் பள்ளி மாணவராக நடிக்க உள்ளதாகவும், இதற்காகதான் தயாரிப்பாளர் தரப்பு,டிஜிங் டெக்னிக்கை பயன்படுத்த காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் தளபதி விஜய் தனது 31 வருட சினிமா பயணத்தில் இதுவரை ஸ்கூல் பையன் லுக்கில் நடிக்காததால் விஜய்க்கு இது இதுவரை இல்லாத ஒரு தோற்றமாக இருக்கும். இது தொடர்பான சமீபத்திய தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவிடமிருந்து ஒரு பிரமிக்க வைக்கும் படத்தை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
அதே சமயம் ஹாலிவுட் படமான 'லூப்பர்' என்ற படத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு 'தளபதி 68' திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் நடந்து வருகிறது, தற்போதைய ஷெட்யூல் டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் அடுத்த ஷெட்யூல் நார்வேயில் நடக்கவுள்ளது.
மேலும் குறுகிய ஷெட்யூல் ஜனவரி மத்தியில் தொடங்கும்.மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, வைபவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil