2023-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகர்களின் பட்டியலில் நடப்பு ஆண்டில் 2 பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்த தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.
2023-ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்தது. தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கிய இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வாரிசு திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் வெளியானது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 2-வது முறையாக இணைந்த இந்த படத்தில் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் (LCU) பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
ஆங்கிலத்தில் டேவிட் க்ரோனன்பெர்க்கின் "எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்" படத்தை தழுவி இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததாக விமர்சனங்கள் எழுந்தாலும், விஜய்யின் நடிப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை பாராட்டுகளைப் பெற்றன, இது 2023 ஆம் ஆண்டில் ஐந்தாவது அதிக வசூல் செய்த இந்தியப் படமாகவும், தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் மாறியது.
நெல்சன் திலீப்குமார் இயக்கிய ரஜினிகாந்தின் "ஜெயிலர்", தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டராக உருவெடுத்தது. "லியோ", "ஜெயிலர்" ஆகியவற்றுடன் ஒப்பிடக்கூடிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்து அதிகமான தகவல்கள் வெளியாக தொடங்கியது. அடுத்து 2023-ம் ஆண்டில், தனுஷ் நடிப்பில் வாத்தி, அஜித் நடிப்பில் துணிவு ஆகிய படங்கள் வெளியானது. இதன் மூலம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழர் நடிகர்களின் டாப் 5 பட்டியலில் இடம் பெற்றனர்.
2023-ம் ஆண்டில் சூர்யாவுக்கு எந்த படமும் வெளியாகவில்லை என்றாலும், அடுத்து சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா படத்தின் எதிர்பார்ப்பின் மூலம் அவரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். தற்போது, தளபதி விஜய், "மாநாடு" புகழ் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தற்காலிகமாக "தளபதி 68" என்று பெயரிடப்பட்டுள்ள தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“