வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி: மனைவி சங்கீதாவுடன் வந்து 'வாரிசு' பார்த்த விஜய்

இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் தனது மனைவியை அழைத்து வராமல் தனியாக வந்தது சில வதந்திகளுக்கு காரணமாக அமைந்தது.

இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் தனது மனைவியை அழைத்து வராமல் தனியாக வந்தது சில வதந்திகளுக்கு காரணமாக அமைந்தது.

author-image
WebDesk
New Update
வீடியோ: 'நீங்க எத்தனாங் கிளாஸ் வரை படிச்சீங்க?' நடிகர் விஜயை நேருக்கு நேர் கேட்ட சிறுவன்

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் தனது மனைவியை அழைத்து வராததால், அவர் விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் பரவிய நிலையில், தற்போது இந்த வதந்திக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisment

பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை வெளியாக உள்ள நிலையில்,படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. படக்குழுவினரை போலவே விஜய் ரசிகர்களும் படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஜய் தனது ஸ்டைலில் குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால் இந்த விழாவிற்கு விஜய் தனது மனைவியை அழைத்து வராமல் தனியாக வந்தது சில வதந்திகளுக்கு காரணமாக அமைந்தது.

அதோடு மட்டுமல்லாமல் அதற்கு முன்பு இயக்குனர் அட்லி வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கும் விஜய் தனியாக வந்ததால், அவர் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், சங்கீதா குழந்தைகளுடன் அமெரிக்காவில் உள்ளதால் நிகழ்ச்சி வரமுடியவில்லை என விஜயின் நெருங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisment
Advertisements

இதனிடையே விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வாரிசு படம் பார்க்க வந்துள்ளார். ஆனால் தியேட்டரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் தாமதமாக திரையிடப்படும் என்று கூறியதாகவும், இதற்கு விஜய் ஏன் இன்னும் ரெடி பண்ணவில்லை என்று கூறி கோபப்ட்டதாகவும், பிறகு இரவுக்காட்சி திரையிடப்பட்டு இரவு 8.30 மணிக்கு முடிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கியுள்ள வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சரத்குமார் யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, குஷ்பு, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11-ந் தேதி வாரிசு படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: