Advertisment

அப்போ ஃபாரின் போகலையா? திடீரென தியேட்டரில் என்ட்ரி கொடுத்த விஜய் மனைவி சங்கீதா

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை பார்க்க சென்னையின் பிரபல தியேட்டருக்கு வந்த விஜயின் மனைவி வந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sivakarthikeyan Sangeetha

மாவீரன் படம் பார்க்க வந்த விஜய் மனைவி சங்கீதா

நடிகர் விஜய் மனைவி சங்கீதா தனது குழந்தைகளை பார்த்துக்கொண்டு வெளிநாட்டிலேயே தங்கிவிட்டார் என்று தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் பார்க்க வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் மாவீரன். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் அதிதி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு, சரிதா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இந்த படம் ஜூலை 14 (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், மாவீரன் படம் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தின் வெளியீட்டிற்காக காத்திருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தியேட்டர்களில் பெரிய சைஸ் கட்டவுட் வைத்து திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் மனைவி இன்று மாவீரன் படம் பார்க்க தியேட்டருக்கு வந்த வீடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக எந்த ஒரு விழாவுக்கொ, நிகழ்ச்சிக்கோ வராத நிலையில், குழந்தைகளை கவனித்துக்கொண்டு வெளிநாடடில் தங்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இதனிடையே சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை பார்க்க சென்னையின் பிரபல தியேட்டருக்கு வந்த விஜயின் மனைவி காரில் இருந்து இறங்கி தியேட்டருக்கு சென்ற காட்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து திரும்பியுள்ள சங்கீதா விரைவில் நடைபெற உள்ள லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சங்கீதா தற்போது சென்னை வந்துள்ள நிலையில், தளபதி விஜயுடன் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivakarthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment