பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் வசூலை குவித்து வரும் நிலையில், படக்குழுவினர் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
Advertisment
பிரபல இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்த படம் வாரிசு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ந் தேதி வெளியான இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். மேலும் ஸ்ரீகாந்த், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, யோகிபாபு, ஷாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், உலகம் முழுவதும் 200- கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. தற்போது வாரிசு படம் வெற்றிகரமாக 3-வது வாரத்தை கடந்துள்ள நிலையில், படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளதாக படக்குழுவினர் பார்ட்டி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தின் வெற்றி தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விருந்து நிகழ்ச்சியில், படத்தின் முக்கிய கேரக்டரான விஜயின் அப்பா ராஜேந்திரன் கேரக்டரில் நடித்த நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகா சரத்குமாருடன் பங்கேற்றார். இதன் மூலம் வாரிசு படம் ராதிகாவை வெகுவாக கவர்ந்துள்ளது என்று உறுதியாகிறது.
Advertisment
Advertisements
மேலும் 'வாரிசு' படத்தின் வெற்றி விருந்தில், தான் விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை ராதிகா வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், வாரிசு பிளாக்பஸ்டர் #தமிழ் சினிமா #நண்பர்கள் ஒரு இனிடையான மாலை என்று புன்னகையுடன் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு வாரிசு படத்தின் பூஜையில் பங்கேற்ற ராதிகா இந்த படத்தின் தனது கணவர் சரத்குமார் ஒரு பகுதியாக இருப்பதை கூறியிருந்தார்.
அதே சமயம் ராதிகாவும் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் வாரிசு வெற்றி விழாவில் ராதிகா சரத்குமார் பங்கேற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகினறனர். அதே சமயம் விஜய் இந்த போட்டோஸ்களில் ஏன் டல்லாக இருக்கிறார் என்று கேட்டு வருகின்றனர்.
வாரிசு படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'தளபதி 67' படத்திற்காக விஜய் இதுவரை இல்லாத தோற்றத்துடன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்த தயாராகும் போது புதிய ஹேர் லுக்கில் வலம் வருகிறார் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், தயாரிப்பாளர்கள் எப்போது வேண்டுமானாலும் தகவலை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே வாரிசு திரைப்படம் இரண்டு வார முடிவில் ரூ 273 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளதாகவும், பாக்ஸ் ஆபிஸில் படத்துடன் மோதிய அஜித்தின் அதிரடி நாடகமான 'துணிவு'வை விட அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil