Advertisment

விஜயகாந்த்- பிரேமலதா 33-வது திருமண விழா கொண்டாட்டம்: வீடியோ- போட்டோஸ் வைரல்

விஜயகாந்த் – பிரேமலதா தம்பதி தங்களது மகன்கள், மற்றும் பிரேமலதா சுதீஷ் உள்ளிட்டோருடன் திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விஜயகாந்த்- பிரேமலதா 33-வது திருமண விழா கொண்டாட்டம்: வீடியோ- போட்டோஸ் வைரல்

தமிழ் திரையுலகில் கேப்டன் என்ற என்ற அடைமொழியுடன் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த விஜயகாந்த் தனது 33-வது திருமண நாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த், தொடர்ந்து பல வெற்றிப்படங்களளை வசூலில் சாதனையும் படைத்திருந்தார். நடிப்பு மட்டுமல்லாது தனது நல்ல குணத்திற்கும் பெயர் பெற்ற இவர், மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்ட விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பேச முடியாமல் தவித்து வருகிறார். இதனால் படங்களில் நடிப்பது முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. தற்போது சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், சினிமா அரசியல் என எதிலும் தலையிடாமல் ஓய்வெடுத்து வருகிறார்.

publive-image

இதனிடையே விஜயகாந்த் இன்று தனது 33-வது திருமண நாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். 1990-ம் ஆண்டு பிரேமலா என்பரை திருமணம் செய்துகொண்ட விஜயகாந்துக்கு விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், விஜயகாந்தி – பிரேமலதா தம்பதி தங்களது திருமண வாழ்கையில் 33-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

இந்த நாளை விஜயகாந்த் – பிரேமலதா தம்பதி தங்களது மகன்கள், மற்றும் பிரேமலதா சுதீஷ் உள்ளிட்டோருடன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment