Advertisment

வடிவேலுவை அடிக்கலையா என கேட்டார் விஜயகாந்த்: பிரபல நடிகர் பகீர்

வடிவேலு விஜயகாந்த் மட்டுமல்லாமல் பல நடிகர்ளுடன் மோதலில் இருந்ததால் தான் படவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் என்று கூறப்பட்டது.

author-image
WebDesk
May 05, 2023 18:10 IST
Vadivelu

விஜயகாந்த் - வடிவேலு

படப்பிடிப்பு தளத்தில் என்னை அழைத்து அசிங்கப்படுத்திய நடிகர் வடிவேலுவை ஏன் சும்மா விட்டு வந்தீங்க என்று கேப்டன் விஜயகாந்த் தன்னிடம் கேட்டதாக நடிகர் மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் விஜயகாந்த் ஒரு மிகப்பெரிய ஆளுமை என்பது பலருக்கும் அறிந்த ஒரு தகவல். சக நடிகர்கள் மட்டுமல்லாமல் தான் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே மகக்ளுக்கு சேவை செய்த விஜயகாந்த், அரசியலில் குறுகிய காலத்தில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார்.

தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நடிப்பு மற்றும் அரசியலில் இருந்து ஓய்வில் இருந்து வரும் விஜயகாந்த் குறித்து அவ்வப்போது அவருடன் இருந்த நடிகர்கள் பல தகவல்களை பகிர்ந்து வருகிறனர். அந்த வகையில் நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டியில், வடிவேலு குறித்து விஜயகாந்த் பேசிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

சினிமாவில் விஜயகாந்தால் வளர்ந்த நடிகர் வடிவேலு ஒரு கட்டத்தில் விஜயகாந்துடன் மோதலுடன் இருந்தார். தற்போதுவரை இந்த மோதல் தொடர்ந்தாலும் விஜயகாந்த் குறித்து தற்போது வடிவேலு எதுவும் பேசுவதில்லை. அதேபோல் வடிவேலு விஜயகாந்த் மட்டுமல்லாமல் பல நடிகர்ளுடன் மோதலில் இருந்ததால் தான் படவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் என்று கூறப்பட்டது.

மேலும் விஜயகாந்த் வடிவேலு மோதல உச்சக்கட்டத்தில் இருந்தபோது விஜயகாந்துடன் நெருக்கமான இருந்த மீசை ராஜேந்திரனை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து நடிக்க வாய்ப்பு கொடுக்காமல் அசிங்கப்படுத்தியுள்ளார் வடிவேலு. இந்த விஷயம் விஜயகாந்துக்கு தெரியவர மறுநாள் மீசை ராஜேந்திரனை அழைத்து நடந்து குறித்து விசாரித்துள்ளார்.

இதில் மீசை ராஜேந்திரன் சொன்னதை கேட்டு அவர் அப்படி செய்தார் என்றால் அவரை சும்மா ஏன் விட்டு வந்தீங்க என்று கேட்டுள்ளார். இல்ல கேப்டன் அவர் பெரிய நடிகர் என்று சொல்ல என்ன பெரிய நடிகர் இப்படி பண்ணலாமா என்று கேட்க, நடிகர் சங்கம் வரும் என்று ராஜேந்திரன் பதில் அளித்துள்ளார். என்ன நடிகர் சங்கம் நம்மை மீறி நடிகர் சங்கம் வந்துவிடுவமா என்று கேட்டுள்ளார். அதன்பிறகு அவர் நடிக்க கூப்பிட்டாலும் இனிமேல் நீங்கள் போக வேண்டாம் என்று சொன்ன கேப்டன், அவனுக்கு சின்னக்கவுண்டர் படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்தது நான் தான். மாற்று துணி இல்லாமல் இருந்தவனுக்கு 8 வேட்டி 8 சட்டை வாங்கி கொடுத்தது நான் தான் என்று கூறியதாக மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vijayakanth #Vadivelu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment