தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் முக்கியமானவர் விஜயகுமார். 1961-ம் ஆண்டு வெளியான ஸ்ரீவள்ளி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான விஜயகுமார், ஒரு சில படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும், பல படங்களில் வில்லன், குணச்சித்திரம் என முக்கிய கேரக்டரில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தவர். முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள விஜயகுமார், மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள விஜயகுமார் கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் எதிர்கட்சி தலைவராக நடித்திருந்தார். மேலும் 2022-ம் ஆண்டு வெளியான ஓ மை டாக் என்ற படத்தில், விஜயகுமார் தனது மகன் மற்றும் பேரன் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்த படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் தாத்தா மகன் பேரன் ஆகியோருடன் நநடித்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வரும் விஜயகுமார், தற்போது ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் ராஜா சேதுபதி என்ற ஸ்பெஷல் கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் டி.வி நிகழ்ச்சியில் விஜயகுமார் தனது குடும்பத்துடன் பங்கேற்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அருண்விஜய், தனது மகள் ஸ்ரீதேவி, மற்றும் அனிதா ஆகியோருடன் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஒரு பாடல் போட்டு அனைவரும் டான்ஸ் ஆடுகின்றனர். இதில் ஒரு கை முறிந்த நிலையில், அருண்விஜய் ஆடுகிறார். அப்போது ஸ்ரீதேவி நாங்கள் வீட்டில் எப்போமே பாடல் போட்டு இப்படி தான் ஆடிக்கொண்டிருப்போம் என்று சொல்ல, அதன்பிறகு பேசும் அனிதா, அப்பாவின் எனர்ஜியை மேட்ச் பண்ண முடியாது என்று கூறியுள்ளார். கலாட்டா தமிழ் சேனலில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“