எமர்ஜென்சி வார்டு கதறல்கள் உணர்த்திய உண்மை... டாக்டர் வேலையை உதறிய அனிதா விஜயகுமார்!

மருத்துவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அனிதா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில, தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார், 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Arun Vijay Sister

வெளிநாட்டில் மருத்துவராக பணியாற்றி வந்த நடிகரு விஜயகுமாரின் மூத்த மகள் அனிதா விஜயகுமார், தற்போது வீடியோ ஒன்றில், தனது அப்பா மற்றும் குடும்பத்தினர் குறித்து பேசியுள்ள தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் விஜயகுமார். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட கேரக்டரில் நடித்து புகழ்பெற்றுள்ள இவருக்கு முத்துக்கண்ணு, மஞ்சுளா என இரு மனைவிகள். இதில் முதல் மனைவி முத்துகண்ணுவுக்கு கவிதா, அனிதா அருண்விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதில் கவிதா ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அருண் விஜய் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

அதே சமயம், திரைத்துறை பக்கம் திரும்பி பார்க்காதவர் 2-வது மகள் அனிதா விஜயகுமார். மருத்துவம் படித்துள்ள இவர், வெளிநாட்டில் டாக்டராக பணியாற்றி வந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் சொந்த வீடு வாங்கியதாக தகவல் வெளியானது. மேலும் இந்த வீட்டின் கிரகப்பிரவேஷத்தை முடித்த அனிதா விஜயகுமார், சமீபத்தில் தனது மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். அதன்பிறகு, அதன்பிறகு மருத்துவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அனிதா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில, தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார், 

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், அதிகமான ரசிகர்கள் உங்களுடைய ப்ரொபஷனலில் உச்சத்தில் இருக்கும் போது எதற்காக விருப்ப ஓய்வு பெற்று வந்தீங்க கேட்கிறார்கள். அவர்கள் கேள்விக்கு இப்போது நான் பதில் சொல்ல விரும்புகிறேன். சின்ன வயதில் இருக்கும்போதில் இருந்தே எனக்கு டாக்டராக வேண்டும் என்று கனவு இருந்தது. நான் எப்போதும் வீட்டில் டாக்டர் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன் அதனால் என்னுடைய அப்பாவும் அம்மாவும் நான் டாக்டர் ஆவதற்கு சம்மதம் தெரிவித்து அதற்காக என்னை படிக்க வைத்தார்கள்.

Advertisment
Advertisements

எங்கள் வீட்டில் எல்லோரும் என்ன விருப்பப்படுகிறோமோ அதைத்தான் பெற்றோர்கள் செய்து தந்திருக்கிறார்கள். அதே போல எனக்கான தேவைகள் எல்லாவற்றையும் அவர்களே செய்து தந்தார்கள். எனக்கு ஆரம்பத்தில் இருந்து அவசர சிகிச்சை பிரிவில் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையும் கனவும் இருந்த்து. மக்களோடு பழக வேண்டும் மக்கள் கஷ்டப்படும் போதும் பதட்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். அதுபோல் நான் படித்து முடித்ததும் 20 வருடங்கள் ப்ரொபோஷர் வேலை பார்த்தேன். அதற்குப் பிறகு அடுத்தடுத்து உயர்வு பெற்றேன்.

கடைசியாக நான் 50 வயதில் ரிட்டையர்டு ஆகும் போது எமர்ஜென்சில் 15 வருடங்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பலர் உயிர் போற நேரத்தில்  என்னுடைய குடும்பத்தை பாக்கணும், என்னுடைய மகனை பார்க்கணும், மகளைப் பார்க்கணும் என்று தான் எல்லோரும் கெஞ்சுவார்கள். நான் இதுவரைக்கும் சேர்த்து வைத்த சொத்து வேணும், நான் வாங்கி வைத்த பொருள்களை பார்க்கணும் என்று யாரும் கேட்டது கிடையாது. காரணம் எல்லோரும் கடைசியில் உறவுகளை மிஸ் பண்ணி இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும்.

அதனால் தான் நான் அதுபோல இருந்து விட கூடாது என்று நினைத்தேன். என்னுடைய வாழ்க்கைக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு பணத்தை சேர்த்து விட்டேன். பிறகு என்னுடைய குடும்பம் உறவுகள் நண்பர்களோடு நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைத்துதான் நான் அதிகபட்ச சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும்போது என்னுடைய கேரியரில் இருந்து ரிட்டையர்டு வாங்கி விட்டு நான் வந்து விட்டேன். ஆனால் என்னை மாதிரி எல்லாராலும் செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

முடிந்த அளவிற்கு உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் நண்பர்களோடு நேரத்தை செலவிடுங்க. உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை என்பது ஒரு மிக மிகக் குறுகியது. யாருக்கு எப்போ என்ன நடக்கும் என்று தெரியாது .இருக்கிற நாள் வரைக்கும் நமக்கு பிடித்ததை செய்து விடுங்கள் என்று கூறியுள்ளார். அனிதாவின் இந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

vijayakumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: