scorecardresearch

நடிகை கவிதா விஜயகுமார் ஞாபகம் இருக்கா? அமெரிக்காவில் பர்த்டே- குடும்ப போட்டோஸ்

1995-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி என்ற படத்தில் அவரது தங்கையாக திரையுலகில் அறிமுகமானவர் கவிதா விஜயகுமார்

Kavitha Vijayakumar
கவிதா விஜயகுமார்

பழம்பரும் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் கவிதா விஜயகுமார் தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் விஜயகுமார். 1961-ம் ஆண்டு வெளியான ஸ்ரீவள்ளி என்ற படத்தில் கடவுள் முருகன் வேடத்தில் நடித்து குழந்தை திரையுலகில் அறிமுகமான விஜயகுமார்,  1973-ம் ஆண்டு சிவக்குமார் நடிப்பில் வெளியான பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்தின் மூலம் நடிகராக உயர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்த விஜயகுமார் வில்லன் குணச்சித்திரம், காமெடி உள்ளிட்ட பல கேரக்டர்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தார். சிவாஜி கணேசன் தொடங்கி கமல்ஹாசன், ரஜினிகாந்த், சரத்யராஜ், சரத்குமார், பிரபு, கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகளுடன் மட்டுமல்லாமல் விஜய் அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு உள்ளிட்ட இன்றைய தலைமுறை நடிகர்ளுடனும் நடித்துள்ளார்.

1969-ம் ஆண்டு முத்துக்கண்ணு என்பரை திருமணம் செய்துகொண்ட விஜயகுமாருக்கு கவிதா, அனிதா அருண்விஜய் உள்ளிட்ட 3 பிள்ளைகள் உள்ளனர். அதனைத் தொடர்ந்து 1976-ம் ஆண்டு மஞ்சுளாவை திருமணம் செய்துகொண்ட விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட மூத்த மகள் கவிதா தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

1995-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி என்ற படத்தில் அவரது தங்கையாக திரையுலகில் அறிமுகமான கவிதா அதன்பிறகு பட வாய்ப்பு குவிந்தாலும் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்தார். அதன்பிறகு சங்கர் என்பரை திருமணம் செய்துகொண்ட கவிதா விஜயகுமார் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் என 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் மகள் ஹாசினிக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதில் ஹாசினியின் முதல் மகள் நடிகர் அருண்விஜய் மனைவியின் தம்பியை திருமணம் செய்துள்ளார். நாடகங்களில் நடித்து வந்த விஜயகுமாருக்கு தனது மகள் பிறந்த பிறகுதான் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்ததாகவும் அதனால் தனது மகள் எப்போதுமே தனக்கு ஸ்பெஷல் தான் என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாடிய கவிதா விஜயகுமாருக்கு அவரது குடும்பத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actor vijayakumar daughter kavitha 55th birthday photos viral

Best of Express