பழமபெரும் நடிகர் விஜயகுமாரின் 2-வது மகள் அனிதா. சினிமாவில் தலைக்காட்டாத முகம் என்றாலும் இவரை பற்றி பலருக்கும் நன்கு தெரியும்.
விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மகளான அனிதாவுக்கு, சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் குவிந்துள்ளது.
பாரதிராஜா தனது கருத்தம்மா படத்தில் அனிதாவை நடிக்க வைக்க முயற்சித்துள்ளார். ஆனால் விஜயகுமார் மனைவி முத்துக்கண்ணு அதற்கு சம்மதிக்கவில்லை.
படிப்பில் ஆர்வம் கொண்ட அனிதா எம்.பி.பி.எஸ். படித்து டாக்டரகிவிட்ட நிலையில், தன்னுடன் படித்த கோகுல் என்பவரை திருமணம செய்துகொண்டர்.
அனிதா கோகுல் தம்பதிக்கு தியா மற்றும் ஸ்ரீஜெய் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் தியாவும் டாக்டருக்க படித்துள்ளார்.
அதேபோல் மகன் ஸ்ரீஜெய் டாக்டருக்கு படித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வருகிறார். தியா லண்டனில் பணியாற்றுகிறார்.
இதில் தியா தனது நீண்ட நாள் காதலரன தில்லான் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் தியா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இவர் டாக்டரா அல்லது ஆக்டரா என்று கேட்கும் அளவுக்கு நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும வகையில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.