நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா திருமணம் கடந்த மாதம் கோலாகமாக நடைபெற்ற நிலையில், தற்போது தனது மருமகனுக்காக அனிதா விஜயகுமார் தனியார் ஹோட்டலில் விருந்து கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் விஜயகுமார். இவரின் மூத்தமகள் அனிதா. சரத்குமாருடன் இணைந்து கூலி என்ற படத்தில் நடித்துள்ள இவருக்கு தியா என்ற மகள் உள்ளார். தியாவுக்கு கடந்த மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. சமூகவலைதளங்களில் எந்த பக்கம் பார்த்தாலும், விஜயகுமார் வீட்டு திருமணம் தொடர்பான செய்திகளே நிரம்பி வழிந்தது.
விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய், மற்றும் மகள்கள் ஸ்ரீதேவி, ப்ரீத்தா உள்ளிட்ட விஜயகுமாரின் உறவினர்கள் பலரும் தியாவின் திருமணம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி வந்தனர். திருமணம் முடிந்து விஜயகுமார் தனது சொந்த ஊரில் பேத்திக்கும் அவரது கணவருக்கும் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தார்.
வாணவேடிக்கையுடன் நடைபெற்ற இந்த வரவேற்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. திருமணத்தில் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், சொந்த ஊரில் வைத்த வரவேற்பில் உறவினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். கடந்த மாதம் திருமண கொண்டாட்டம் முடிந்து அனைவரும் ஓய்வில் இருந்த நிலையில், தற்போது அனிதா விஜயகுமார் தனது மருமகனுக்காக ஷேரடோன் ஹோட்டலில் பிரம்மாண்ட விருந்து வைத்துள்ளார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் அருண் விஜய் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்றிருந்த நிலையில், விஜயகுமார், அவரது மனைவி முத்துகண்ணு, பேரன் ஸ்ரீஹரி (வனிதாவின் மகன்) மற்றும் மணப்பெண் தியா அவரது கணவன் திலன் ஆகியோர் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை அனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“