Advertisment

சிவகார்த்திகேயனுடன் ஒப்பந்தம் போட்ட விக்ரம் : தங்கலான் vs அமரன் ஒரே நாளில் வெளியாகுமா?

என் படம் வெளியாகும்போது உங்கள் படம் வெளியாக கூடாது என்று விக்ரம் சிவகார்த்திகேயனிடம் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Sivakarthikeryan Vikram

சிவகார்த்திகேயன் - விக்ரம்

விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதே நாளில் சிவகார்த்திகேயனின் அமரன் படமும் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், சிவகார்த்திகேயன் – விக்ரம் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு போட்டுக்கொண்ட ஒப்பந்தம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானர் விக்ரம். சிவாஜி, மற்றும் கமல்ஹாசனுக்கு பிறகு கேரக்டருக்காக தன்னையே மாற்றிக்கொண்டு நடிக்கும் நடிகர் என்று பெயரேடுத்துள்ள விக்ரம், தற்போது தங்கலான் என்ற படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகன்ன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதமே தங்கலான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது படம் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதே நாளில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது, சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில், விக்ரம் பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்பது உங்கள் தலையெழுத்து. அதற்காக நீங்கள் கஷ்டப்படவில்லை என்று நான் சொல்லவில்லை. உங்களுக்கு திறமை இருக்கிறது. சினிமாவுக்கு வருவது லக் என்று நினைக்கிறார்கள்.

சினிமாவில் வெற்றி பெறுவதற்கு திறமையும் கடின உழைப்பும் முக்கியம். அந்த இரண்டுமே உங்களிடம் இருக்கிறது கூடவே அழகும் இருக்கிறது. ஆனால் என் படம் வெளியாகும்போது உங்கள் படம் வெளியாக கூடாது என்று கூறியிருந்தார். இதில் இருவருமே ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தங்கலான் – அமரன் ஒரே நாளில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivakarthikeyan Vikram Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment