ஐதராபாத்தில் தங்கலான் படக்குழு நன்றி தெரிவிக்கும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம், தங்கலான் படத்தின் 2-ம் பாகம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விக்ரம். நடிப்புக்காக தனனை எந்த எல்லைக்கும் மாற்றிக்கொள்ளும் ஆர்வம் கொண்ட இவர் வித்தியாசமான நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில், விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய படம் தான் தங்கலான். விக்ரம், பசுபதி, மாளவிகா மோகன், பார்வதி, ஆங்கில நடிகர் டேனியல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 15) வெளியான தங்கலான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், விக்ரமின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. விக்ரம் ரசிகர்களுக்க இந்த படம் பெரிய விஷூவல் ட்ரீட்டாக அமைந்திருந்தாலும், பொதுவான ரசிகர்கள் மத்தியில் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
குறிப்பாக படத்தில் வசனங்கள் சரியாக புரியவில்லை என்றும், பா.ரஞ்சித் தனது சமூகம் சார்ந்த கருத்துக்களை அதிகளவில் புகுத்தியுள்ளா என்றும் அவரை பிடிக்காதவர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதேபோல் பொதுவான ரசிகர்கள் பலரும் படம் நன்றாக இருந்தாலும், வசனங்கள் புரியவில்லை. படம் எதை நோக்கி செல்கிறது என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளனர். ஆனாலும், தங்கலான் படம் வெற்றிகராமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதனிடையே தங்கலான் படக்குழு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விக்ரம், தங்கலான் 2 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, தங்கலான் படம் மக்களுக்கு மிகவும் பிடித்திருப்பதால். இந்த படத்தின் 2ம் பாகத்தை விரைவில் தொடங்கலாம் என்ற தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் இயக்குன பா.ரஞ்சித் ஆகியோருடன் சேர்ந்து முடிவு செய்துள்ளோம் என்ற விக்ரம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தங்கலான் படத்தின் 2-ம் பாகத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“