கடன் கேட்ட விக்ரம்-க்கு ஜெயம் ரவி கொடுத்த பதில்: வெளிநாட்டில் நடந்த சம்பவம்; உண்மை இதுதானா?
எனக்கென்று தனி பேங்க் அக்கவுண்ட் கிடையாது. மனைவியுடன் ஜாயின் அக்கவுண்ட் தான். நான் என்ன செலவு செய்தாலும், அதை பற்றி கேள்வி கேட்பார் என்று ஜெயம்ரவி கூறியிருந்தர்.
சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்த ஜெயம்ரவி, தனக்கு மனைவி வீட்டில் மரியாதை இல்லை, தான் நடித்த படங்களால் அவர்களுக்கு நஷ்டம், தனக்கென்று தனியாக வங்கி கணக்கு கிடையாது என்று பல குறைகளை கூறியிருந்த நிலையில், இவை அனைத்தும் உண்மைதான் என்பது போல் நடிகர் விக்ரம் அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜெயம் ரவி, ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு, 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானவுடன், ஜெயம்ரவி எங்களை தவிக்கவிட்டு சென்றுவிட்டார் என்று ஆர்த்தி குறைகளை கூறியிருந்தார். அதற்கு ஜெயம்ரவிக்கும் பதில் அளித்திருந்தார்.
இதனிடையே நேற்று பிரபல யூடியூபர் ஆர்.ஜே.ஷா ஜெயம்ரவி தன்னிடம் கூறியதாக பல தகவல்களை தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதில், எனக்கென்று தனி பேங்க் அக்கவுண்ட் கிடையாது. மனைவியுடன் ஜாயின் அக்கவுண்ட் தான். நான் என்ன செலவு செய்தாலும், அதை பற்றி கேள்வி கேட்பார். ஆனால் அவருக்கு 3-4 அக்கவுண்ட்கள் இருக்கும். அவர் இஷடத்திற்கு செலவு செய்வார். என் சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு இருவர் பெயரிலும் இருக்கிறது.
6 கார்கள் இருக்கிறது. இதில் 2 என் பெயரிலும், 4 மனைவி பெயரிலும் இருக்கிறது. மனைவியின் அம்மா நிறுவனத்தில் நான் 3 படங்கள் நடித்தேன். இந்த 3 படங்களும் லாபம் தான். ஆனால் படம் நஷ்டம் என்று கணக்கு காட்டினார்கள் என்று ஜெயம் ரவி கூறியதாக ஆர்.ஜே.ஷா கூறியிருந்தார். தற்போது ஜெயம் ரவி கூறிய அனைத்து தகவல்களும் உண்மைதான் என்பது போல், நடிகர் விக்ரம் அளித்திருந்த பழைய பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
Advertisements
நான் எப்போதும் பர்ஸ் வைத்திருக்க மாட்டேன். பணம் தேவைப்பட்டால் எனது உதவியயாளர்களிடம் வாங்கிக்கொள்வேன். நானும் ஜெயம்ரவியும் எப்போதாவது வெளிநாட்டுக்கு பார்ட்டிக்கு செல்லும்போது, பணம் தேவைப்பட்டால், மச்சா பைசா இருக்கா என்று ஜெயம்ரவியிடம் கேட்பேன். அதற்கு அவர் என்னிட்ட இல்லண்ணா என்று சொல்லிவிட்டு அவர் மனைவியிடம் வாங்கி கொடுப்பார் என்று விக்ரம் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், இப்போது ஜெயம்ரவி கூறியதை பார்க்கும்போது அவர் சொல்வது உண்மைதான் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“