Advertisment

நடிகர் சங்க கட்டிடம்... ரூ40 கோடி கடன் : பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

நடிகர் சங்கத்தின் எதிர்கால பொருளாதா திட்டமிடல் குறித்து பொதுச்செயவலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி இருவரும் கூட்டத்தில் உரையாற்றினர்

author-image
WebDesk
New Update
Vishal Nasser Karthi

நடிகர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பு

சென்னையில் இன்று நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ரூ 40 கோடி கடன் வாங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. தலைவர் நாசர் தலைமையில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் விஷால் பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோருடன், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நடிகர் சங்கத்தின் எதிர்கால பொருளாதா திட்டமிடல் குறித்து பொதுச்செயவலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி இருவரும் கூட்டத்தில் உரையாற்றியதை தொடர்ந்து, பொதுச்செயலாளர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 2-வது முறையாக எங்களை தேர்ந்தெடுத்த நடிகர் நடிகைகளுக்கு நிச்சயமாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று கூறினார்.

மேலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கும் வேலைகளில் மும்பரமாக ஈடுபட்டு வருகிறோம். நிச்சயமாக அடுத்த பொதுக்குழு கூட்டம் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடைபெறும் என்று நம்புகிறேன். எங்கள் அணி அளித்துள்ள அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். அதேபோல் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ரூ 40 கோடி கடன் வாங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்ட உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.  நடிகர் சங்க கட்டிட விவகாரத்தில் விரைவில் நல்ல செய்தி வரும். கிட்டத்தட்ட 3 வருடத்துக்குப் பின்னர், கட்டிடத்தில் உள்ள இரும்புக் கம்பிகள் எல்லாம் துருபிடித்துவிட்டது. எனவே, இந்தக் கூட்டத்தில், உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்றும், வங்கிக்கடன் பெற்று, சங்க கட்டிடத்தை முடிக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

தாண்டி, இம்முறை கட்டிடடம் நிச்சயம் கட்டப்படும் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு முதல் நிகழ்வாக எனது திருமணம் நடைபெறும் என்று நடிகர் விஷால் குறிப்பிட்டுள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vishal Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment