Advertisment

நம்மை காப்பாற்றுபவை இந்த இரண்டும் தான் : ரசிகர்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் கடிதம்

Vishnu vishal pens letter to fans : நேர்மறையான சிந்தனைகளும், ஒழுக்கமும் நம்மை எத்தகைய சூழ்நிலைகளிலிருந்தும் காப்பாற்றும் என்று நடிகர் விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vishnu vishal, vennila kabaadi kuzhu, wife, divorce, kid, family issues, problems, drinking, body weight, drunk addict, fans, letter

vishnu vishal, vennila kabaadi kuzhu, wife, divorce, kid, family issues, problems, drinking, body weight, drunk addict, fans, letter

நேர்மறையான சிந்தனைகளும், ஒழுக்கமும் நம்மை எத்தகைய சூழ்நிலைகளிலிருந்தும் காப்பாற்றும் என்று நடிகர் விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…

நடிகர் விஷ்ணு விஷால், பல பிரச்னைகளுக்கு மத்தியில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியாது. அந்தப் பிரச்னைகளையெல்லாம், அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தின் மூலம், இப்போது வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி இருக்கிறார். ரசிகர்களுக்கான கடிதமான தன்னுடைய சங்கடங்களை எல்லாம் அவர் பட்டியலிட்டுக் கூறியிருக்கிறார்.

அவர் ரசிகர்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள ரசிகர்களுக்கு...

நான் என்னைப் பற்றிய சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய இத்தனை ஆண்டுகால வாழ்க்கை பலரைப் போலவும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்த ஒன்றாகவே இருந்தது. ஆனால், கடைசி இரண்டு ஆண்டுகள் மிகுந்த கடினமான ஒன்றாகவும், இருள் நிறைந்த பகல்களும், இரவுகளும் நிறைந்ததாக இருந்தது. அவற்றைப் பற்றிப் பேசவேண்டிய நேரம் இதுவென கருதுகிறேன்.

என்னுடைய சினிமா வாழ்க்கையில் எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்தபோது, என் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை சீரழிந்தது. 2017ல், நானும், என் மனைவியும் 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த வாழ்க்கையை முறித்துக் கொண்டோம். இரண்டு வீடுகளில் வாழ்ந்தது மட்டும் எனக்கு ஏற்பட்ட துயரமல்ல; பிறந்து, சில மாதங்களே ஆகியிருந்த என் மகனையும் நான் பிரிய நேர்ந்தது. என் வாழ்க்கை இப்படி மாறும் என நினைத்ததே இல்லை. குடிகாரனாக மாறினேன். ஒவ்வொரு இரவும், நான் உடைந்துபோகும் வரை குடித்தேன். அந்த நாட்கள் மோசமாக மாறின. மன அழுத்தமும் தூக்கமின்மையும் என்னை உடலளவில் நோயாளியாக மாற்றியது. சிறு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

மோசமான நாட்களில் படத்தை ரிலீஸ் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். நான் உருவாக்கியிருந்த தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்துக்கு சென்றது. அதனால் பண நெருக்கடியும் ஏற்பட்டது. இதனால் என் சொந்த தயாரிப்பில் தயாரான திரைப்படத்தை 21 நாள் ஷூட்டிங்குக்குப் பின், கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் விட, இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் நான் நடித்த காடன் திரைப்பட ஷூட்டிங்கின் போது, விபத்தில் சிக்கி இரண்டரை மாதம் கட்டிலில் கிடந்தேன். அதனால் 11 கிலோ எடை அதிகமானேன்.

ராட்சஸன் இல்லாமல் எட்டு சிறந்த இயக்குநர்களுடன் இணையக் காத்திருந்த கதைகள், என் கையைவிட்டுச் சென்றன. விவாகரத்து, குழந்தையிடமிருந்து பிரிந்தது, உடல் நோய், பண நெருக்கடி, காயம், குடி, உணவுப் பிரச்சினை மற்றும் என் எடை கூடியது என அடி மட்டத்துக்குச் சென்று விட்டேன். உதவ யாருமில்லாமல், ஏதோ ஒரு உலகத்தில் கிடப்பது போல இருந்தேன். அதனால், என் அப்பா ரிட்டையர் ஆனது கூட தெரியாமல் போனது. என் பிரச்னைகளில், நான் உழன்று கொண்டிருந்தது, என் குடும்பத்தையும், குறிப்பாக என் தந்தையை எப்படி பாதித்தது என்பதை நான் கவனிக்கவில்லை. அவரது கையறு நிலையைக் கண்டபோது, என் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

உதவி கேட்டுச் சென்றேன். மன அழுத்தத்தை சரி செய்ய சிகிச்சை மேற்கொண்டேன். எனக்குள் ஒரு சக்தி கிடைக்க உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினேன். சத்தான உணவுகளை உண்ணத் தொடங்கினேன். குடியை நிறுத்தினேன். யோகா செய்யத் தொடங்கினேன். முன் முடிவுகளோடு பழகுபவர்களை வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைத்தேன். எதிர்மறையாக சிந்திப்பவர்களை பிளாக் செய்தேன். வீட்டில் இருப்பவர்களுடன் அதிக நேரம் செலவிட்டேன். நேர்மறை எண்ணமுடைய நண்பர்களுடன் மட்டும் பழகத் தொடங்கினேன்.

காயம் ஏற்பட்ட பின், உடற்பயிற்சி செய்யவே கூடாது என்று சொன்னார்கள். ஆனால், நான் ஜிம்முக்குப் போனேன். முதல் நாள் என்னால் ஒரு புஷ்-அப் கூட எடுக்க முடியவில்லை. ஆனால், 6 மாதம் கழித்து இப்போது 16 கிலோ எடை குறைவாக வலிமையாக, எனது அடுத்த நான்கு படங்களுக்குத் தயாராகி விட்டேன். என்னைப் போலவே கஷ்டப்பட்டுக் கொண்டு பலர் இருக்கலாம். உங்களுக்கெல்லாம் நான் சொல்ல நினைப்பது ஒன்று தான். நாம் எப்போது வேண்டுமானாலும் திரும்பி எழலாம். நேர்மறையான சிந்தனைகளும், ஒழுக்கமும் உங்களைக் காப்பாற்றும். இவ்வாறு அவர், அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.

Vishnu Vishal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment