மருதமலை முருகன் கோவிலில் யோகி பாபு: 2 கதைகளின் கோப்புகளை வைத்து சாமி தரிசனம்

ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகின்றனர். அதில் மாதவன் கதாநாயகனாகவும், யோகி பாபு முக்கிய கேரக்டரிலும் நடிக்க நடிக்க உள்ளார் ‌.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Yogi In Marudhal

பிரபல திரைப்பட காமெடி நடிகர் யோகி பாபு தான் நடிக்க இருக்கும் இரு புதிய படங்களின் கதைக் கோப்புகளை மருதமலை திருக்கோயில் வைத்து சிறப்பு சாமி தரிசனம் செய்தார்.

Advertisment

தமிழ் திரை உலகில் சமீப காலமாக மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் யோகி பாபு. கோவையின்  ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றை  திரைப்படமாக எடுத்து வருகின்றனர். அதில் மாதவன் கதாநாயகனாகவும், யோகி பாபு முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகிறார். இதற்கான படபிடிப்பு நாளை முதல் இரண்டு நாட்கள் கோவையில்  நடைபெற உள்ளது.

படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்து யோகி பாபு இன்று மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலுக்கு இரவு 7 மணி  சாமியே தரிசனம் செய்ய வந்தார். விசேஷ பூஜைமான அர்த்தஜாம பூஜையில் கலந்து கொண்டார். தான் கொண்டு வந்திருந்த புதிய படப்பிடிப்பில் கதை கோப்புகளை சாமியின் பாதத்தில் வைத்து வணங்கி பெற்றுக் கொண்டார். கடவுள் பக்தி அதிகம் கொண்ட யோகி பாபு கோவைக்கு வரும்போது எல்லாம் மருதமலைக்கு தவறாமல் வந்து செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: