இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில், சினிமா நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்ற நிலையில், இந்த திருமணத்திற்கு வந்த சிம்பு – தனுஷ் இருவரும் சந்தித்து பேசிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சிம்பு – தனுஷ். சினிமா பின்னணி கொண்ட இருவரும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், தற்போது பல படங்களை கைவசம் வைத்து நடித்து வருகின்றனர். அதேபோல், சினிமாவில் சக நடிகர்களிடம் இருக்கும் போட்டி வழக்கமானது என்ற நிலையில், சிம்பு – தனுஷ் படங்களுக்கு இடையே ஏற்படும் போட்டி சுவாரஸ்யமானதாக அமையும்.
அதே சமயம், இவர்கள் இருவருக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்று அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றிருந்தனர். அந்த வகையில், இந்த திருமணத்தில் பங்கேற்ற சிம்பு – தனுஷ் இருவரும் சநதித்து பரஸ்பரமாக உரையாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் பங்கேற்ற நிலையில், நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பங்கேற்றிருந்தார். மேலும் அனிருத், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணி நட்சத்தரங்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு தனுஷ் என்.ஓ.சி கொடுக்காததால், அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல் ஒரே வரிசையில் அமந்திருந்தாலும், தனுஷ் – நயன்தாரா இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்த புகைப்படங்கள் வைரலாகியது. மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் – தனுஷ் இடையே மோதல் இருற்து வருவதாக கூறப்படும் நிலையில், ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் தனுஷ் – சிவகார்த்திகேயன் இருவரும கட்டிப்பிடித்து அன்பை பறிமாறிக்கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“