முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஐஸ்வர்யா பாஸ்கர் தனது திருமண வாழக்கை குறித்து பேசியுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
70-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் லட்சுமி. சிவாஜி எம்ஜிஆர் தொடங்கி தற்போது ரஜினி விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்த லட்சுமி சூர்யாவுடன் வேல் படத்தில் அவரது பாட்டியாக நடித்திருந்தார்.
இவருடைய மகள் ஐஸ்வர்யா. அம்மாவை போலவே சினிமாவில் கால்பதித்த அவர், 1989-ம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா, மில் தொழிலாளி, தையல்கரான், ராசுகுட்டி மீரா, உள்ளே வெளியே உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்மூலம் தமிழ் தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வாய்ப்பு பெற்ற ஐஸ்வர்யா முன்னணி நாயகியாக வலம் வந்தார். தொடர்ந்து நாயகி வாய்ப்பு குறையவே, பழனி, எம்.குமரன், ஆறு உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
அதிலும் ஆறு படத்தில் இவர் நடித்த சவுண்டு சரோஜா கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஒரு கட்டத்தில் பெரிய திரை வாய்ப்பு குறையவெ சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த ஐஸ்வர்யா, அழகு, தென்றல், உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கிய இவர், தனது சவுண்டு சரோஜா கேரக்டரில் என்ட்ரி கொடுத்து பல சமையல் ரெசிபிகளை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட் அளித்த ஐஸ்வர்யா, தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். இதில் தன்னுடன் நட்பாக இருந்த தன்வீர் என்பரை திருமணம் செய்துகொண்டேன். 3 மாதங்கள் தான் எங்கள் இருவருக்கும் பழக்கம். ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரேக் விட்ட கேப்பில் நான் மதம் மாறி திருமணம் செய்துகொண்டு மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே திரும்பி வந்துவிட்டேன்.
அதன்பிறகு சில மாதங்களில் நான் கர்ப்பமானேன் எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கர்ப்பமாக இருக்கும்போதே கணவரை பிரிந்துவிட்டேன். அதன்பிறகு என் பொண்ணுக்கு ஒன்னரை வயது ஆகும்போது விவாகரத்க்கு அப்ளை செய்து இருவரும் பிரிந்துவிட்டோம். தன்வீருக்கு திருமணமாகி தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாங்கள் பிரிந்து இருந்தாலும் எங்களுக்குள் இன்னும் நட்பு அப்படியே தான் உள்ளது
எங்கள் மகளுக்கு எதுவாக இருந்தாலும் நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்தே முடிவு செய்வோம் தன்வீரின் மனைவி ரொம்ப நல்ல பர்சன். என் மகள் அப்பா அம்மா இருவரிடமும் தான் வளர்ந்தாள். விவாகரத்துக்கு பின் நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் அதுவும் பாதியில் முறிந்துவிட்டது. லவ் பண்ண ஆரம்பிக்கும்போது எது எல்லாம் பிடித்ததோ அது எல்லாம் லவ் பண்ண பிறகு மாற்றிக்கொள்ள வேண்டும்.
என்னைக்கு ஐ லவ் யூ சொல்கிறோமோ அன்னைக்கே கதை முடிந்தது. இந்த ட்ரெஸ் போடாத அவன் கூட பேசாத என்று சொல்வார்கள் தாய்க்கு பின் தாரம் என்று சொன்னவனை உதைத்தால் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ லாட்டா பிங்க் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/