பாலிவுட் தொகுப்பாளருக்கு லவ் ப்ரபோஸ் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ் : த்ரோபேக் வீடியோ வைரல்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை திரைப்படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில், இந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை திரைப்படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில், இந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
இந்தி பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராஷே், தொகுப்பாளர் ஒருவருக்கு தமிழ் கற்றுக்கொடுத்தது ப்ரபோஸ் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Advertisment
1996-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ரம்பத்து என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து நீதான அவன், உயர்திரு 420 அட்டக்கத்தி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 2012-ம் ஆண்டு தமன்குமார் நடிப்பில் வெளியான ஆச்சரியங்கள் என்ற படத்தின் மூலம் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா, அதன்பிறகு புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் காக்கா முட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்
காக்கா முட்டை திரைப்படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில், இந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா வட சென்னை படத்தின் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது நாயகிக்கு முக்கியத்தும் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா ரன் பேபி ரன், ஃபர்ஹானா உள்ளிட்ட சுமாரான வரவேற்பை பெற்றது.
விக்ரமுடன் இவர் நடித்த துருவ நட்சத்திரம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், மோகன் தாஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் மலையாளத்தில் சில படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா கடந்த 2017-ம் ஆண்டு டாடி என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். அர்ஜூன் ராம்பால் நாயகனாக நடித்த இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
Advertisment
Advertisements
டாடி படத்தின் ப்ரமோஷனுக்காக இந்தியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியான தி கபில்சர்மா ஷோ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில், ஐஸ்வர்யாவை வரவேற்கும் தொகுப்பாளர் கபில்சர்மா, உங்களுக்கு திருமணமாகிவிட்டதா என்று கேட்க, ஐஸ்வர்யா ஷாக் ஆகிறார். அதன்பிறகு திரையில் திருமணமாகிவிட்டதா என்று கேட்டேன் என கூறியுள்ளார். அதற்கு ஆமாம் திரையில் திருமணமாகிவிட்டது. இவர் தான் என் கணவர் என்று அர்ஜூன் ராம்பாலை காட்டியுள்ளார்.
ரியல் லைஃபில் நான் சிங்கிள் தான் என்று சொல்ல, கபில்சர்மா அவரது அருகில் அமர்ந்துகொள்கிறார். அதன்பிறகு தமிழில் சில வார்த்தைகளை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று கபில் சர்மா சொல்ல, அவருக்கு நான் உன்னை காதலிக்கிறேன் என்று தமிழில் சொல்லித்தருகிறார். இதை சொல்லும் கபில் சர்மா, இதற்கு என்ன அர்த்தம் என்று இந்தியில் கேட்க, ஐ லவ் யூ என்று ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்ல அரங்கமே சிரிப்பலையில் அதிர்கிறது.
6 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான டாடி திரைப்படம் தோல்விப்படமாக அமைந்தததால், அதன்பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தியில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“