'இனி வாழ்நாள் முழுக்க உன்னோடு': அமலாபால் லவ் ஸ்டோரி

இறுதியாக தானே தயாரித்த கடாவர் என்ற படத்தில் நடித்திருந்தார். மைஸ்ரி த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றது

இறுதியாக தானே தயாரித்த கடாவர் என்ற படத்தில் நடித்திருந்தார். மைஸ்ரி த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றது

author-image
WebDesk
New Update
Amala paul jakth desai

அமலாபால் - ஜெகத் தேசாய்

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை அமலா பால் பிறந்த நாளில்அவரது காதலர் ஜெகத் தேசாய் ப்ரபோஸ் செய்த வீடியோவை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியிருந்த நிலையில், தற்போது அமலாபால் இந்த காதலை ஏற்றுக்கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கததில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அமலாபால் தொடர்ந்து சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் அவருக்கு கை கொடுக்காத நிலையில், அடுத்து மைனா என்ற படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து விஜய் தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருந்தார்.

இறுதியாக தானே தயாரித்த கடாவர் என்ற படத்தில் நடித்திருந்தார். மைஸ்ரி த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அமலாபால் மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய அமலாபாலுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக அவரது காதலர் ஜெகத் தேசாய் அமலா பாலுக்கு ப்ரபோஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தற்போது ஜெகத் தேசாய் ப்ரபோஸ்க்கு பதில் அளித்துள்ள அமலாபால் தனது காதலை உறுதி செய்துள்ளார். மேலும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், இனி வாழ்நாள் முழுவதும் உன்னோடு தான் என்று குறிப்பிட்டு காதல் கதை தொடக்கத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாகக் கொண்டாடத் தொடங்கிய விருந்திலிருந்து எங்கள் காதல் கதை வெளிப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

அமலா பால் நடிப்பில் 'தெய்வ திருமகள்' மற்றும் 'தலைவா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஜய்யை கடந்த 2014 ஆம் ஆண்டில், திருமணம் செய்துகொண்ட அமலாபால் 2016-ம் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். 2020 ஆம் ஆண்டில், மும்பையைச் சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங்குடன் அமலா பாலின் உறவு பற்றிய செய்திகள் வெளியானது. மேலும் பாரம்பரிய திருமண உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி, இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக ஊகங்கள் எழுந்தன. ஆனால், இது வெறும் போட்டோஷூட் என்று அமலா பால் விளக்கம் அளித்து, இரண்டாவது திருமணத்தை மறுத்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Amala Paul

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: