சமீபத்தில் தனது காதலர் ஜெகத் தேசாய் என்பரை 2-வது திருமணம் செய்துகொண்ட அமலாபால் தனது கணவருடன் லிப் லாக் செய்த வீடியோ காட்சி இணையத்தில வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கேரளாவை பூர்விமாக கொண்ட அமலாபால் வீர சேகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற தவறிவிட்ட நிலையில், அடுத்து சாமி இயக்கத்தில் சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு நெகடீவ் இமேஜை பெற்று தந்தது. படத்திற்கு பெரும் எதிர்ப்புகளும் கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் அமலா பால்க்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தது. முதல் 2 படங்களில் பெரியதாக கவனம் ஈர்க்காத அமலா பால் மைனா படத்தின் மூலம் பலதரப்பட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து விஜய் தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருந்தார்.
தலைவா படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த அமலாபால் அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் காதலில் விழுந்தார். இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய அமலாபால்இறுதியாக தானே தயாரித்த கடாவர் என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி அமலாபால் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய போது அவருக்கு, வாழ்த்து சொல்லும் விதமாக அவரது காதலர் ஜெகத் தேசாய் ப்ரபோஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வந்த நிலையில், அமலா பால் அந்த காதலை ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலர் ஜெகத் தேசாய்-யை திருமணம் செய்துகொண்ட அமலாபால் திருமணம் தொடர்பான புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில வெளியிட்டிருந்தார். தற்போது ஹனிமூன் கொண்டாடி வரும் அமலாபால – தேசாய் தம்பதி லிப்லாக் கொடுக்கும் வீடியோ காட்சியை தங்களது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“