Advertisment

நிறைமாத கர்ப்பிணி அமலா பால் : பின்னணி பாடகியாக புது அவதாரம் : எந்த படத்தில்?

தற்போது படங்களில் அமலாபால் நடிக்கவில்லை என்றாலும், அவர் முன்பு நடித்த ஆடு ஜீவிதம் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

author-image
WebDesk
New Update
amala Paul 2

நடிகை அமலா பால்

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலா பால் பல வழிகளில் பிரசவத்திற்கு தயாராகி வரும் நிலையில், தற்போது பாடகியாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், தமிழ் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து பிரிந்துவிட்ட நிலையில் சமீபத்தில் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் அமலா பால் தான் கர்ப்பமாக இருப்பதாக அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார்.

அதன்பிறகு போட்டோஷூட், வாளைகாப்பு என பிஸியாக இருந்து வரும் அமலாபால் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதேபோல் தற்போது படங்களில் அமலாபால் நடிக்கவில்லை என்றாலும், அவர் முன்பு நடித்த ஆடு ஜீவிதம் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2024-ம் ஆண்டு அதிக வசூல் செய்த மலையாள படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இதனையடுத்து அமலா பால் நடிப்பில் அடுத்து லெவல் க்ராஸ் என்ற படம் வெளியாக உள்ளது. தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் அமலாபா பால், புதிதாக எதாவது முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்திலும், தனது குழந்தைக்கு பரிசாக அளிக்கவும் தற்போது பின்னணி பாடகி அவதாரம் எடுத்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைபபில், அமலா பால் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

லெவல் க்ராஸ் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற படத்தின் இயக்குனர், அர்பாஸ் அயூப் அமலாபால் இந்த படததில் பாடல் பாடியிருப்பதாகவும், அவரை பாட வைத்தது மிகவும் கடினமாக இருந்தது என்று விளையாட்டாக சொல்ல, படப்பிடிப்பு இடைவேளை நேரத்தில் நான் ஹம்மிங் செய்ததை அவர் பார்த்திருப்பார் என்று அவரும் விளையாடாக பதில் அளித்திருந்தார். இந்த படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைத்த டியூன்களுக்கு, விநாயக் சஷிகுமார் பாடல்கள் எழுதியுள்ளார்.

ஜூன் 2-வது வாரத்தில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் ஆசிப் அலியின் வித்தியாசமான கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதோடு மட்டுமல்லாமல், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Amala Paul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment